Designed by Iniyas LTD
விரைவில் சிறை செல்வார் ப.சிதம்பரம் – எச்.ராஜா ஆருடம்
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் விரைவில் சிறைக்கு செல்வது உறுதி என பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். 
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் சட்டமன்றத் தொகுதி பாஜக ஊழியர் கூட்டம் நடைபெற்றது. இதில் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பாஜக நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரமும் இந்தியாவின் முதல் பணக்காரராக உள்ளனர் என தெரிவித்தார்.
இருவர் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதால், விரைவில் அவர்கள் சிறைக்கு செல்வதும் உறுதி எனவும் எச்.ராஜா கூறினார்.