Designed by Iniyas LTD
தணிக்கைக் குழுவால் இசைப்பிரியா படுகொலை பற்றிய படம் நிராகரிப்பு
“போர்க்களத்தில் ஒரு பூ” எனும் ஊடகவியலாளர் இசைப்பிரியா குறித்த திரைப்படம், இலங்கை ராணுவ வீரர்களை தவறாக சித்தரிப்பதாகக் கூறி தணிக்கை மறுக்கப்பட்டதாக அப்படத்தின் இயக்குநர் கணேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்படத்தை தணிக்கை செய்வதற்காக அதிகாரி ஜெயந்தி முரளிதரனிடம் திரையிடப்பட்டதாக தெரிவித்துள்ளார். படத்தைப் பார்த்த பின்னர், சட்டமன்றத்தில் ஜெயலலிதா நிறைவேற்றிய முதல் தீர்மானத்தை அவமானப்படுத்தும் வகையில், நட்பு நாட்டு ராணுவ வீரர்கள் பற்றி அவதூறாக கூறப்பட்டிருப்பது தவறானது என்று அதிகாரி வாதம் செய்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும் சேனல் 4 மற்றும் இந்திய ஊடககங்களில் வெளியாகிய ஆதாரப்பூர்வமான காட்சிகளின் அடிப்படையில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியும் படத்திற்கு தணிக்கை மறுக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.
தனது முடிவு குறித்து மும்பை தணிக்கை முதன்மையாளருக்கு கடிதம் எழுதப்படும் என்றும் அதிகாரி ஜெயந்தி முரளிதரன் கூறியதாக இயக்குநர் கணேசன் தெரிவித்துள்ளார்.