Designed by Iniyas LTD
பிரித்தானிய தமிழர் பேரவை சார்பில் லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுசரிப்பு
கடந்த 2009 ஆம் ஆண்டு சிங்கள பேரினவாத அரசினால் நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்த தமிழ் உறவுகளுக்கு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நகர்பகுதியில் பிரித்தானிய தமிழர் பேரவை சார்பில் நினைவேந்தல் நிகழ்வு அனுசரிக்கப்பட்டது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ஆயிரக் கணக்கானோர் கலந்துக்கொண்டு முள்ளிவாய்க்கால் போரில் உயிர்நீத்த அப்பாவி தமிழ் மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.

