Designed by Iniyas LTD
தந்தையின் உழவியந்திரத்தினுள் சிக்குண்டு ஒன்றரை வயது குழந்தை மரணம் – யாழில் சம்பவம்..
யாழ். மல்லாகம் கல்லாரைப் பகுதியில் தந்தையின் உழவியந்திரத்தினுள் சிக்குண்டு ஒன்றரை வயது குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த அசம்பாவித்தத்தில் விஜயகாந் சஸ்மிதன் என்ற பாலகனே உயிரிழந்துள்ளது.
வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த உழவியந்திரத்தைக் குழந்தை தந்தை வெளியே செல்வதற்காக இயக்கியுள்ளார். அப்போது உழவியந்திரத்தின் சத்தம் கேட்டு வீட்டினுள்ளே இருந்த குழந்தை வெளியே வந்துள்ளது.
குழந்தை வந்ததை அவதானிக்காத தந்தை உழவியந்திரத்தைப் பின்னோக்கி நகர்த்தியுள்ளார்.
இதன்போது உழவியந்திரத்தின் சில்லினுள் அகப்பட்ட குழந்தை நசிவடைந்துள்ளது.
உடனடியாக குழந்தையை மீட்டுத் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதும் ஏற்கனவே குறித்த குழந்தை உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
குறித்த சம்பவம் மல்லாகம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.