தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தியாகி திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நாளுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி…

தியாகி திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நாளுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியாகி திலீபனின்  நினைவு நாளுக்கான ஏற்பாடுகளை   முன்னாள் போராளிகள் , துயிலுமில்ல நடவடிக்கையில் ஈடுபடுவோர், பல்கலைக்கழக சமூகத்தினர் ,

ஊடகவியலாளர்கள் அடங்கலாக உள்ள தமிழ் உணர்வாளர்களின் கருத்துகளின் அடிப்படையில்  செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வுகள் தொடர்பில் அறிக்கை ஒன்றும்  விடுக்கப்பட்டுள்ளது

அந்த அறிக்கையில் மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த மாறன் அவர்களின் ஒருங்கிணைப்பில்  நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுகளின் முதன்மைச் சுடரை தீவகத்தைச் சேர்ந்த இரு மாவீர்ர்களின் தந்தையும் மூத்த போராளியுமான ஒருவர் ஏற்றுவார் என்றும்,.

தொடர்ந்து அங்கு சமுகமளித்துள்ள ஏனைய மாவீரர்களின் பெற்றோர்கள் ஈகைச்சுடர்களை ஏற்றியதை அடுத்து .தியாகி திலீபனின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்படும்.

அதனை தொடர்ந்து தியாகி திலீபனையும் தமிழரின் விடுதலை போராட்ட வரலாற்றில் ஆகுதியாகிய மாவீரர்களையும் பொதுமக்களையும் நினைவு கூரும் வகையில் அகவணக்கம் நடைபெறும். அதைத் தொடர்ந்து மலர் அஞ்சலி இடம்பெறும்.

இதேவேளை அந்த இடத்தின் புனித்த்தைப பேணும் வகையில் எவரது உரையும் அங்கு இடம்பொறாது எனவும் தெரிவிகப்பட்டுள்ளது.

திலீபனின் நினைவை பகிரவிரும்பும் அல்லது தமது உணர்வினை உலகுக்கு உரைக்க ஆர்வமுள்ளவர்களுக்காக நல்லூர் மேற்கு வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்,  அவ்வாறான எண்ணம் உடையோர் அதில் இணைந்து கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மாவீர்ர் நாளுக்கு முன்னதாக எமது எதிர்பார்ப்புகளுக்கு இலங்கை தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா மதிப்பளித்திருந்தார்.இந்த முறையும் அந்த  முன்மாதிரியை அனைவரும் பின்பற்றுவார்கள் என்றும்  நம்புகிறோம் ந்த அறிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் எமது வேண்டுகோளுக்கு மதிப்பளித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், ஐனநாயகப் போராளிகள் கட்சியினர், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் அனைவருக்கும் எமது நன்றிகளெனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Comments
Loading...