தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தனக்கு மிகவும் பிடித்த புரட்சியாளர் விடுதலைபுலிகளின் தலைவர் என கூறியுள்ளார் சின்னதிரை பிரபலம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மிகவும் பிடிக்கும் என தமிழக சின்னத்திரை நடிகர் மொஹமட் அஷீம் தெரிவித்துள்ளார்.

தமிழக இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

சின்னத்திரை உலகில் அஷீம் மிகவும் பிரபலமடைந்து வருகிறார்.

 அவர் நடித்த பிரியமானவளே, பகல் நிலவு போன்ற மெகா தொடர்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெற்றவை.

பிறப்பால்  தான்  ஒரு முஸ்லிமாக இருந்தாலும் தமிழின் மீது அதிக பற்று உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

புரட்சியாளர்களில் உங்களை மிகவும் கவர்ந்த புரட்சியாள யார் என குறித்த ஊடகம் கேள்வி எழுப்பியபோதே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தனக்கு  மிகவும் பிடிக்கும் என  அக்ஷீம் கூறியுள்ளார்.

மேலும்  தமிழக அரசியல்வாதிகளான கலைஞர், சீமான், திருமாவளவன் போன்றோரையும் பிடிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

Comments
Loading...