Designed by Iniyas LTD
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் வாழ்நாள் முழுமைக்கும் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடையை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் விதித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் செரீப் இருந்தபோது அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளில் சொத்துக் குவித்தது குறித்துக் கணக்குக் காட்டவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு அவரைத் தகுதி நீக்கம் செய்திருந்தது,
அதோடு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியமைக்காக தேர்தலில் போட்டியிட எத்தனை ஆண்டுகளுக்குத் தடை விதிக்கலாம் என்பது குறித்து தலைமை நீதிபதி சாகிப் நிசார் தலைமையிலான 5நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தியிருந்தனர் .
இந்நிலையில் நவாஸ் செரீப் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் அவரைத் தகுதி நீக்கம் செய்து நீதிபதிகள் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
