தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தனி ஈழத்துக்கு போராடிய எமது மக்கள் காணிகளுக்கு போராடவேண்டியுள்ளது!

blogger-image--1601555596தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் பலர் அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு தெரி­வித்து வரும் நிலையில் தமிழ்­மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளைக் கூட தீர்க்க முடி­யாமல் உள்­ளமை அர­சாங்­கத்­தின்­ மே­லா­தி­கத்­தையும் மெத்­தனப் போக்­கையும் தமிழர் தரப்பின் இரா­ஜ­தந்­திர பல­வீ­னத்­தையும் எடுத்துக் காட்­டு­கி­றது என்று சிறி­ரெலோ கட்­சியின் செய­லாளர் ப.உத­ய­ராசா தெரி­வித்­துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

 நாளாந்தம் மாற்­றங்­களை கண்­டு­வரும் இந்த நவீன உலகில் 60 வரு­டங்­க­ளாக மாற்­ற­ம­டை­யாமல் இருக்கும் ஒரே விடயம் இலங்­கையில் வாழும் தமிழ் மக்­களின் இனப்­பி­ரச்­சி­னை­யா­கத்தான் இருக்­க­மு­டியும். கடந்த 60 வரு­டங்­களில் பல ஜன­நா­யக போராட்­டங்­க­ளையும், ஆயுத போராட்­டங்­க­ளையும், இழப்­புக்­க­ளையும் தியா­கங்­க­ளையும், கடந்து மீண்டும் ஆரம்­பித்த இடத்தில் வந்­து­நிற்கும் தமி­ழர்­களின் கோரிக்கை பல­வீனம் அடைந்து செல்­வ­தினை அவ­தா­னிக்­க­மு­டி­கின்­றது.

தனி ஈழம், சம­உ­ரிமை ,தன்­னாட்சி அதி­காரம் எனப் போரா­டிய தமிழ் மக்கள் தற்­போது வீதி வீதி­யாக இறங்கி காணாமல் போன­வர்­களை மீட்­ப­தற்கும், அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­கா­கவும், இரா­ணு­வத்­தி­னரால் அப­க­ரிக்­கப்­பட்ட காணி­களை மீளப் பெறு­வ­தற்­கா­கவும் போரா­டி­வ­ரு­கின்­றனர்.

முன் எப்­போதும் இல்­லாத வகையில் தமிழ் மக்கள் குறைந்­த­பட்ச தீர்­வி­னை­யா­வது பெற்­று­விட வேண்­டு­மென்ற எண்­ணத்­ துடன் இறு­தி­யாக நடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் மக்­களின் அனு­தா­பி­க­ளாக தம்மை காட்­டிக்­கொண்­ட­வர்­க­ளுக்கு ஏகோ­பித்த ஆத­ர­வினை வழங்­கியும் காலம் கால­மாக எதிர்ப்பு அர­சியல் நடத்­தி­வந்த தமிழ் மக்­களின் பெரும்­பான்­மையை பெற்ற தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு நிபந்­த­னை­யற்ற ஆத­ர­வினை புதிய அர­சாங்­கத்­திற்கு வழங்­கியும், பாரா­ளு­மன்­றத்தில் அதி­கா­ர­மிக்க பத­வி­களில் ஒன்­றான எதிர்க்­கட்சி தலைவர் உள்­ளிட்ட பத­வி­களை தமிழ் தரப்­புகள் அலங்­க­ரித்தும், தமிழ் மக்­களின் பல பிர­தி­நி­திகள் மத்­திய அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு தெரி­வித்து வரும் நிலை­யிலும் தமிழ் மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­களை கூட தீர்க்க முடி­யாமல் உள்­ளமை பெரும்­பான்­மை­யின அர­சாங்­கத்தின் மேலா­திக்­கத்­தையும் மெத்­தனப் போக்­கையும், தமிழர் தரப்பின் இரா­ஜ­தந்­திர பல­வீ­னத்­தை­யுமே வெளிப்­ப­டுத்­து­கின்­றது

நாட்டில் அதி­யுயர் பதவி வகிக்கும் ஜனா­தி­பதி அர­சியல் கைதிகள்,காணாமல் போனோர் மற்றும் தமிழ் மக்­களின் காணி தொடர்பில் மக்­க­ளுக்கும் எதிர்க்­கட்சி தலை­வ­ருக்கும் வழங்­கிய வாக்­கு­று­தி­களைக் கூட நிறை­வேற்ற முடி­யாமல் அல்­லது விரும்­பாமல் இருப்­பது புதிய அரசு தமிழ் மக்­களின் எதிர் பார்ப்­புக்­களில் இருந்து தடம் மாறி­செல்­கி­றதா? என்ற சந்­தே­கத்தை வலுக்கச் செய்­கின்­றது.

காணாமல் போனோர் உள்­ளிட்ட விட­யங்­களை விசா­ரிக்­க­வென அமைக்­கப்­பட்ட பர­ண­கம ஆணைக்­கு­ழுவும் காணாமல் போனோர் தொடர்பில் தமிழர் தரப்பால் கூறப்­படும் எண்­ணிக்­கையை குறைத்து காட்ட முனை­வ­துடன் பிர­த­மரும் அதை வலுப்­ப­டுத்தும் வகையில் சனல் 4 செய்­தி­யா­ள­ருக்கு கருத்து கூறும்­போது காணாமல் போன­வர்­களின் எண்­ணிக்கை மிகக் குறை­வா­னது எனக் கருத்­துப்­ப­டும்­ப­டி­யான பதிலை பதி­வு­செய்­துள்ளார்.

அது­மட்­டு­மன்றி பிர­தமர் உள்­ளிட்ட அர­சாங்க பிர­மு­கர்கள் தமிழ் மக்­க­ளிடம் பேசும்­போது ஒரு கருத்­தையும் சிங்­கள மக்­க­ளிடம் பேசும்­போது வேறொரு கருத்­தையும் சர்­வ­தே­சத்­திடம் இரண்­டிற்கும் மாறு­பட்ட கருத்­துக்­க­ளையும் பதி­செய்து வரு­கின்­றனர். இவ்­வா­றான போக்கு குறு­கிய காலத்­துக்கு அனை­வ­ரையும் மகிழ்­விக்கும் செயற்­பா­டா­கவே அமை­யுமே தவிர நாட்டில் மாற்­றத்தை கொண்­டு­வர போவ­தில்லை. தொடர்ந்து ஆட்­சிக்கு வரும் அர­சாங்­கங்கள் ஆரம்­பத்தில் இனப்­பி­ரச்­சனை தீர்வை கையில் எடுப்­பதும் பின்னர் தென் இலங்­கையில் சிறிய குளுக்­காளால் காட்­டப்­ப­டு­கின்ற எதிர்ப்­புக்­களைக் கார­ணம்­காட்டி கைவி­டு­வ­து­மான போக்­கையே இந்த அர­சாங்­கமும் கையாளப் போகின்­றது என்­பதே தமிழ் மக்­களின் அச்­ச­மாக உள்­ளது

இந்த நல்­லாட்சி அர­சாங்கம் சிங்­கள மக்­களின் அன்­றாட பிரச்­சி­னை­களை தீர்க்கும் முயற்சில் காட்டும் வேகத்­தையும் முன்­னைய அர­சாங்­கத்தின் ஜனா­தி­பதி உள்­ளிட்ட தமக்கு எதி­ரா­ன­வர்கள் மீது சுமத்­திய குற்­றச்­சாட்­டுக்­களை நிரூ­பிப்­பதில் காட்டும் ஆர்­வத்தில் ஒரு பகு­தி­யேனும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களில் காட்­டி­யி­ருந்தால் ஓர­ள­வேனும் தமி­ழர்­களின் அடிப்­படை பிரச்­ச­னைகள் தீர்க்­கப்­பட்­டி­ருக்கும். இந்த அர­சாங்கம் வெறும் பேச்­ச­ளவில் தமிழ் மக்­களை மகிழ்­விக்கும் செயற்­பாட்டை முன்­னெ­டுப்­பதன் மூலம் சர்­வ­தே­சத்­தி­ட­மி­ருந்து தமக்கு கிடக்கும் நற்­பெ­ய­ரையும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் ஆத­ர­வையும் பயன்­ப­டுத்தி போர்­குற்ற விசா­ர­ணை­களில் இருந்தும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை சபையின் அழுத்­தங்­களில் இருந்தும் நாட்­டையும் இரா­ணு­வத்­தையும் காப்­பாற்றும் நட­வ­டிக்­கை­களை இரா­ஜ­தந்­திர ரீதியில் மேற்­கொண்டு வரு­கின்­றது .

இதனை புரிந்­து­கொள்­ளாத அல்­லது புரிந்தும் புரி­யா­தது போல் நடந்­து­வரும் தமிழ் மக்­களின் பிரதி நிதிகள் இப்­போ­துதான் காணாமல் போன­வர்­களின் விப­ரங்­களை காணாமல் போன­வர்­களின் உற­வி­னர்­க­ளிடம் கோரு­வதும் இது­தொ­டர்­பாக நாங்கள் பாரா­ளு­மன்றில் பேசு­கிறோம் என சமாதானப் படுத்துவதும் , தீர்வு பற்றி ஆராய வெளிநாடுகளுக்கு செல்லுவதுமாக தமிழ் மக்களுக்கு பூச்சாண்டி காட்டும் நிலையில் தமிழ் மக்கள் “ஆற்றாலும் கெட்டு குளத்தாலும் கெட்டு” செய்வதறியாது தவிர்த்து வருகின்றனர் இந்த தருணத்தில் தமிழ் மக்கள் சரியான முடிவுகளை எடுக்கத்தவறும் பட்சத்தில் எதிர்காலம் கேள்விக்குறியாகவே அமையும் எனவே உடனடியாக தமிழர்கள் சார்ந்த அணைத்து அரசியல் கட்சிகள் பொது அமைப்புக்கள் ஒன்றினைந்து முடிவெடுக்க வேண்டுவதுடன் மக்கள் அரசியல் ரீதியில் விழிப்படையந்து ஜனநாயக் ரீதியிலான நீண்ட போராட்டங்களை நடாத்த முன்வர வேண்டும்.

Comments
Loading...