Designed by Iniyas LTD
தனுஷ்கோடி அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 687 கிலோ கஞ்சா பறிமுதல்
ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 687 கிலோ கஞ்சா கடலோர காவல்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியிலிருந்து கஞ்சா இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக கடலோர காவல்படைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, தனுஷ்கோடிக்கும், ஆதாம் பாலத்திற்கும் இடையே மூன்றாவது மணல் திட்டு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 23 மூட்டை கஞ்சாவை கடலோர காவல்படையினர் கைப்பற்றினர். அதன்பின் கடலோர காவல்படையினர் கைப்பற்றப்பட்ட 687 கிலோ எடையுள்ள கஞ்சாவை, ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதன் சர்வதேச மதிப்பு சுமார் 7 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.