தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கை அரசின் போர்க்குற்ற விசாரணையை செப்டம்பர் மாதத்திற்குள் தொடங்க வேண்டும்: ஐ.நா வலியுறுத்தல்

இலங்கையில் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை தொடர்பான நடவடிக்கைகள் செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.

tamil-refugees-lஐ.நா மனித உரிமை அமைப்பின் 29 வது கூட்டத் தொடர் ஜெனிவாவில்  இன்று ஆரம்பமாகியுள்ளது. இதில் உரையாற்றிய ஐ.நா மனி‌த உரிமை அமைப்பின் ஆணையர் செயிட் ராட் அல்ஹீசேன், இலங்கை தொடர்பிலான ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும்  இலங்கையின் புதிய அரசு கொண்டுவந்துள்ள 19 வது சட்டதிருத்தம் நல்லாட்சிக்கு வழிவகுக்கும் என நம்புவதாக அவர் கூறியுள்ளார். வெளிப்படைத்தன்மையுடன் இலங்கை அரசு போர்க்குற்ற விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும், ஐ.நா தொடர்ந்து இதற்கான உதவிகளை வழங்கும் என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஐ.நா அமைப்பினால் இலங்கை தொடர்பான அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன் இலங்கை அரசின் விசாரணைகள் ஆரம்பிக்கப்படுமென தான் நம்புவதாக செயிட் ராட் அல்ஹீசேன் கூறியுள்ளார்.

Comments
Loading...