தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தன்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ள இளையதளபதி….

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘சர்கார்’ படத்தில் நடித்து வரும் விஜய், தன்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறார்.

சர்க்கார் அரசியல் கதையாக உருவாகும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.
படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், அக்டோபர் 2-ம் தேதி ஆடியோ வெளியிடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தில் விஜய் நடிக்கும் காட்சிகளுக்குக்கான படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து விட்டது.
ஒரு படத்தில் தனது பங்களிப்பு முடிந்த உடன் தனது அடுத்த படம் பற்றி அறிவிப்பது விஜய் பாணி.
அந்தவகையில்  விஜய், தான் நடிக்க உள்ள அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவலை விரைவிலேயே வெளியிட அதிகமான வாய்ப்புள்ளது.
Comments
Loading...