தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமது காலத்தின் பின்னர் அரசியல் சமூக அமைப்புக்களைக் கொண்டு நடத்தப் போவது இளைஞர்  யுவதிகளே என கூறியுள்ளார் வடமாகாண முதலமைச்சர்

தமிழ் மக்கள் பேரவை தனது பணிகளை விரிவடையச் செய்ய வேண்டிய காலம் தற்போது கனிந்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்  நூலக கேட்போர் கூடத்தில் இன்று காலை இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இதனை கூறியுள்ளார்.

குறித்த பணிகளை  விரிவுபடுத்துவதற்கு  இளைஞர் யுவதிகளே உறுதுணையாக இருக்கப் போவதாகவும்  அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவை யாவரையும் உள்ளடக்கிய ஒரு மக்கள் இயக்கம் என்றும், மக்களை அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வழி நடத்துவது அதன்  கடமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை காலமும் அரசியல் கொள்கைகளை மக்களுக்கு  தெளிவுபடுத்தியுள்ளதாகவும் தொடர்ந்தும் அந்த பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதோடு  தமது காலத்தின் பின்னர் தமது அரசியல் சமூக அமைப்புக்களைக் கொண்டு நடத்தப் போவது இளைஞர்  யுவதிகளே என்றும்,

அதற்காக அவர்கள்  இப்பொழுதிருந்தே அவர்கள் தமது காரியங்களை, கடப்பாடுகளை, கடமைகளை உணர்ந்து நடக்கத் தொடங்கினால், அதுநன்மை தரும் எனவும்  முதலமைச்சர் சீ.வீ  விக்கினேஸ்வரன் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...