தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமாகாவின் கூட்டணி குறித்து மார்ச் மாதம் அறிவிக்கப்படும் – ஜிகே. வாசன்

போதிய கால அவகாசம் இருப்பதால் தமாகாவின் கூட்டணி குறித்து வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.  gk-vasan

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே வாசன், மத்திய அரசு வழங்கியுள்ள வெள்ள நிவாரண நிதி போதுமானதல்ல என்றும், மேலும் ஆயிரத்து 500 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.  அதேபோல், அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.  கூட்டணி குறித்து முடிவு எடுக்க போதிய அவகாசம் இருப்பதால், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை கேட்ட பிறகு வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்றும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

Comments
Loading...