தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழகத்திலிருந்து 76 அகதிகள் நாடு திரும்பவுள்ளனர் – மீள்குடியேற்ற அமைச்சு

தமிழகத்திலிருந்து 76 அகதிகள் நாடு திரும்பவுள்ளனர் என மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் எதிர்வரும் 29ஆம் திகதி 3 கட்டங்களாகப் பிரிந்து தமது தாயகம் திரும்பவுள்ளனர்.sri-lanka

திருச்சியிலிருந்து 41பேரும் சென்னையிலிருந்து 35பேரும் நாடு திரும்பவுள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சு அறிவித்துள்ளது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தினைச் சேர்ந்தவர்களே இவ்வாறு நாடு திரும்பவுள்ளனர். நாடு திரும்பும் இவர்களுக்கு இலவச விமான பயணச் சீட்டுக்கள் ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்தினால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...