தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழகத்தில் அ.தி.மு.க. அழிந்துவிட்டது; விரைவில் நல்லது நடக்கும் – ராமதாஸ்

உச்சநீதிமன்றத்தின் மூலம் மதுக்கடைகளை மூடுவதற்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு சேலம் மாவட்ட பா.ம.க. சார்பில் பாராட்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் சேலம் அஸ்தம்பட்டியில் புதன்கிழமை இரவு நடந்தது.

இதில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் முதலமைச்சர் வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாசை அறிவித்து அவருக்கு ஒரு பேனாவையும் கொடுத்தேன். அப்போது, ஆட்சிக்கு வந்தவுடன் முதல் நாள் முதல் கையெழுத்தாக, பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான கையெழுத்து போட வேண்டும் என்று கூறினேன்.

மகாத்மா காந்தி, தந்தை பெரியார், மூதறிஞர் ராஜாஜி போன்றவர்கள் மதுவிற்கு எதிராக போராடினார்கள். அவர்களை தொடர்ந்து நானும் கடந்த 36 ஆண்டுகளாக மதுவுக்கு எதிராக போராடி வருகிறேன்.

தி.மு.க., அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னணி தலைவர்கள் தான் தற்போது மது ஆலைகளை நடத்தி வருகிறார்கள். ஆனால் பா.ம.க.வோடு சேர்ந்து தி.மு.க.வும் மதுக்கடைகளை மூட சொல்லி வலியுறுத்தி வருகிறது. தற்போது மூடப்பட்ட மதுக்களை திறப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் குடியிருப்பு பகுதியில் மதுக்கடைகளை திறப்பதற்கு பெண்கள் போராட்டம் நடத்தி வருவதால், தற்போது மதுக்கடைகள் நிரந்தரமாக மூட காலம் கனிந்து வருகிறது. பா.ம.க.ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி நடத்திய தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தமிழகத்தை நாசமாக்கிவிட்டன. தமிழகத்தில் அ.தி.மு.க. அழிந்துவிட்டது. விரைவில் நல்லது நடக்கும். எனவே இருகட்சிகளையும் சேர்ந்தவர்கள் பா.ம.க.வில் இணையுங்கள். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

Comments
Loading...