தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழகத்தில் இன்னும் மூன்று நாட்களுக்கு கடும் வெப்பம்!

201606160817049091_Heat-will-increase-in-Tamil-Nadu-for-further-3-days-IMD_SECVPFதமிழகத்தில் கோடை வெயில் இந்த வருடம் வறுத்து எடுத்தது. அதன் பின்னர் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்தநிலையில் தென் மேற்கு பருவமழை கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் தொடங்கி உள்ளது. தென் மேற்கு பருவமழையின் காரணமாக தென் மாவட்டங்களில் சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து உள்ளது.

மேலும் 3 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை குறித்து சென்னையில் உள்ள வானிலை மைய அதிகாரிகள் நேற்று கூறியதாவது:-

மேற்கு திசையில் இருந்து காற்று வீசவேண்டும். ஆனால் அவ்வாறு வீசப்படும் காற்றில் ஈரப்பதம் மிக குறைவாக உள்ளது. மேலும் மேகமும் இல்லை. கடல் காற்று மிக தாமதமாக இரவில்தான் வீசுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும். இந்த வானிலை அடுத்த 3 நாட்களுக்கு மட்டும்தான் தெரியும். அடுத்து 3 நாட்கள் கழித்து கணக்கிட்டு பார்த்துதான் அடுத்து வெப்பம் எப்படி இருக்கும் என்று கூற இயலும்.

இன்று(வியாழக்கிழமை) தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் சில நேரத்தில் சில பகுதியில் லேசான மழை பெய்யலாம்.

இவ்வாறு வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

தளி 2 செ.மீ., செய்யூர், கூடலூர் பஜார், அவினாசி, சின்னக்கல்லாறு, நடுவட்டம், சாத்தனூர் அணைக்கட்டு தலா 1 செ.மீ.மழை பெய்துள்ளது.

Comments
Loading...