தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழகத்தில் டெங்கு முழுமையாக கட்டுக்குள் இருக்கிறது : அமைச்சர் விஜயபாஸ்கர்

dengueதமிழகத்தில் பன்றிக்காய்ச்சல், டெங்கு உள்ளிட்டவை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலாவது தேசிய தொழில் ஆரோக்கிய மாநாடு நடைபெற்றது. இதனை தொடக்கி வைத்த பேசிய விஜயபாஸ்கர், தமிழகத்தில் சுகாதாரத் துறையில் நிறைவேற்றப்பட்டு வரும் திட்டங்களால் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்வதாக தெரிவித்தார்.

நடப்பு நிதியாண்டில் தமிழக அரசு மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறைக்கு 8 ஆயிரத்து 245 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் தமிழகத்தில் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்கள் 100 சதவிகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Comments
Loading...