Designed by Iniyas LTD
தமிழகத்தில் வறுமையினால் 2ஆயிரம் பேர் இறப்பு – ராமதாஸ்
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2 ஆயிரம் பேர் வறுமை மற்றும் வேலையின்மை காரணமாக உயிரிழந்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அ.தி.மு.க. அரசு பதவியேற்ற பின்னர் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் வேலைவாய்ப்பின்மையால் 1407 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும்,வறுமை காரணமாக 352 பேர் தற்கொலை செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவற்றைப் பற்றி கவலைப்படாமல் அதிமுக மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் வேலைவாயப்பை பெருக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
வறுமையும், வேலையின்மையும் நிலவுவது தான் பசி, பிணியற்ற மாநிலமா? இவை தான் நிம்மதிக்கான அளவீடுகளா? என்பதை முதலமைச்சர் ஜெயலலிதா விளக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பாமக ஆட்சிக்கு வந்தால், தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் ராமதாஸ் உறுதி அளித்துள்ளார்.