தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மக்கள் நலக் கூட்டணியில் ‘முதல்வர் வேட்பாளர்’ என்ற கேள்விக்கு இடமில்லை – திருமாமளவன்

சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பே மக்கள் நலக் கூட்டணியில் ‘முதல்வர் வேட்பாளர்’ என்ற கேள்விக்கு இடமில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாமாவளன் அறிவித்துள்ளார். இதன் மூலம் அந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சைக்கு திருமாவளவன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.  thiruma

இது தொடர்பாக திருமாவளவன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள நான்கு கட்சிகளின் தலைவர்களும் ஏற்கனவே ஒன்றுகூடி, ‘முதல்வர் வேட்பாளர்’ குறித்து விரிவாக விவாதித்து, தெளிவாக ஒரு முடிவை அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.  விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் ரவிக்குமார், மக்கள் நலக் கூட்டணி உருவாவதற்கு முன்பே, 2014-ல் பொதுவெளியில் எழுப்பிய ஜனநாயகக் குரலை, இன்று மக்கள் நலக் கூட்டணிக்கு எதிராக சிலர் திரித்துக் கூற முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

காலங்காலமாக தமிழக அரசியலில் தொடரும் சாதிய ஆதிக்கத்திற்கு எதிராகவும், தலித்துக்களின் மீதான அரசியல் சுரண்டலுக்கு எதிராகவும் உரையாட வேண்டிய ஜனநாயக சக்திகளும் இதனை தலித்துக்களுக்கு எதிராகவே திருப்பிவிடத் துடிக்கின்றனர் என்பது அதிர்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.   மக்கள் நலக் கூட்டணியில் தேர்தலுக்கு முன்பே ‘முதல்வர் வேட்பாளர்’ என்கிற கேள்விக்கே இடமில்லை என்றும் இந்த ஒருமித்த நிலைப்பாட்டில் உறுதியாக விடுதலைச் சிறுத்தைகள் இருக்கும் என்றும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்

Comments
Loading...