Designed by Iniyas LTD
தமிழக அரசு வழங்கிய இலவச பொருட்களை திருப்பி கொடுக்க ஆதிவாசி கிராம மக்கள் முடிவு
குன்னூரில் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் ஆதிவாசி கிராம மக்கள் தமிழக அரசு வழங்கிய இலவச பொருட்களை திருப்பி கொடுக்க முடிவு செய்துள்ளனர். 
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ளது செங்கல்புதூர் கிராமம். இங்கு கடந்த 3 தலைமுறைகளாக ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இதுவரை அந்த கிராமத்தில் மின்சார வசதி செய்து கொடுக்காததால் கிராமமே இருளில் மூழ்கியிருப்பதாகவும், பள்ளிக்கூட பிள்ளைகள் படிப்பதற்கு கூட இரவு நேரங்களில் மிகுந்த சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழக அரசு சார்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் தமிழக அரசு வழங்கிய இலவச பொருட்களான மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை திருப்பி ஒப்படைக்க செங்கல்புதூர் கிராம மக்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்,