Designed by Iniyas LTD
ஆபத்துக்காலங்களில் பொதுமக்கள் எப்படிச் செயல்படவேண்டும் – பிரான்ஸ் அரசு வீடியோ
130 பேர் பலியான நவம்பர் 13 தாக்குதல்கள் போன்ற ஆபத்துக்காலங்களில் பொதுமக்கள் எப்படிச் செயல்படவேண்டும் என்பதை விளக்கி பிரான்ஸ் அரசு வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளது. 
சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த காட்சிகளில், ஆபத்துக்காலங்களில் எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பனவற்றைப் படிப்படியாக விளக்குகிறது. ஆபத்துக்காலங்களில் முதலில் அங்கிருந்து தப்பவேண்டும் என்றும், பின் மற்றவர்கள் தப்ப உதவவேண்டும் என்றும் ஆபத்து குறித்து பிற அனைவரையும் எச்சரிக்கை வேண்டும் என்றும் முதல் வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
பின்பு காவல் துறையினருக்குத் தகவல் அளித்தல், சம்பவ இடத்திற்குக் காவல் துறையினர் வந்தபின் செயல்படும் முறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு, ஆபத்தில் பாதிக்கப்படுபவர்களை மீட்க என்ன செய்யவேண்டும், அப்போது நடந்துகொள்ளவேண்டிய முறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நடந்தது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடப்பதைத் தடுக்கவே இது போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.