Designed by Iniyas LTD
தமிழக மீனவர் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய சிறீலங்கா கடற்படை
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர் மீது மீண்டும் தாக்குதல், மீன்பிடிக்க விடாமல் தடுத்துள்ளனர்.ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், சுமார் 600 படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்துள்ளனர். மீனவர்கள் மீது கற்கள் மற்றும் போத்தல்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். ரோந்து படகுகளை மீனவர்கள் படகுகள் மீது மோதி சேதப்படுத்தி, வலைகளை அறுத்தனர்.
ஸ்ரீலங்கா கடற்படையினர் வலைகளை அறுத்ததால், மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் கரைக்கு திரும்பினர். இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.