Designed by Iniyas LTD
தமிழக வாழ் இலங்கை அகதிகளுக்கு புகலிடம் வழங்கப்பட மாட்டாது – அவுஸ்ரேலியா
தமிழக வாழ் இலங்கை அகதிகளுக்கு புகலிடம் வழங்கப்படாது என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளுக்கு அவுஸ்திரேலியாவில் புகலிடம் வழங்கப் போவதில்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தில் இந்த இலங்கை அகதிகள் பதிவு செய்யப்பட்டவர்கள் அல்ல என சுட்டிக்காட்டியுள்ளது. 2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையில் இந்திய துணைக் கண்டத்தின் ஊடாக அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் பயணித்த சுமார் 1200 புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரிழந்துள்ளதாக தென் இந்தியாவிற்கான அவுஸ்திரேலிய கொன்சோல் அதிகாரி சேன் கெலி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தினால் பதிவு செய்யப்பட்ட அகதிகளுக்கு மட்டுமே புகலிடம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக பிரவேசித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நவுரு மற்றும் மானுஸ் தீவுகளில் தங்க வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.