தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழர்களால் விடுதலைப்புலிகள் தோல்வியை ஏற்கமுடியவில்லை என்கிறார் அமைச்சர் அமுனுகம.

sara

விடுதலைப்புலிகள் தோல்வியை தமிழக கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே தான் சிறீலங்காவை குறை கூறுகின்றனர் என அந்நாட்டு துணை நிதியமைச்சர் சரத் அமுனுகம கூறியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சிறீலங்கா துணை நிதியமைச்சர் சாரத் அமுனுகம இந்தியா சென்றுள்ளார்.அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது

சிறீலங்காவில் 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரின்போது எந்தவித மனித உரிமை மீறலும் நடைபெறவில்லை. இறுதிக்கட்ட போரின்போது  விடுதலைப் புலிகள் தோல்வியடைந்ததை தமிழக அரசியல் கட்சிகளாலும் தமிழர் அமைப்புகளாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதனால்தான் சிறீலங்காவை தொடர்ந்தும் குறை கூறி வருகின்றனர். இது தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு நாங்கள் பதிலளித்திருக்கிறோம் என்றும் சாரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Comments
Loading...