Designed by Iniyas LTD
தமிழினத்தின் விடுதலையை அடகுவைக்க இந்தியா சென்ற சம்மந்தன் குழு
தமிழினத்தின் தலைவிதியை மீண்டும் இந்தியாவின் கைகளில் கொண்டுபோய் ஒப்படைத்துத் தமிழினத்தின் விடுதலையை அடகுவைக்க சம்பந்தன் தலைமையிலான குழு இந்தியா சென்றுள்ளது.
இலட்சக்கணக்கான தழிழீழ மக்களின் இன்னுயிர்களையும் பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள் தமிழீழ மண்ணிற்காய் வீழ்ந்துபட்டும் கட்டிக்காத்த தமிழீழத் தனியரசிற் கான விடுதலை மூச்சை 13ம் திருத்தச் சட்டப் பொதிமூட்டைக்குள் நசுக்கிக்க் கொன்றுவிட வரம் வாங்கச் சென்றுள்ளது சம்பந்தன் தலைமையிலான குழு.
இந்தியப் பிரதமர் மோடியிடம் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் ஆசியோடும் வழிகாட்டலோடும் இந்த அணி புறப்பட்டுச் சென்றது. இனப்படுகொலை விசாரணைகளை எக் காரணம் கொண்டும் விரிவுபடுத்தக் கூடாது என்ற எச்சரிக்கையைக் கட்சிக்கு வழங்கி விட்டு இந்தியா சென்றுள்ள இவர்கள், தமிழினத்தின் ஆதாரமூச்சான இனவிடுதலை பற்றி மூச்சே விடப் போவதில்லை.
காலம் காலமாக இந்திய அரசுகள் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் 13ம் திருத்தச் சட்டத்தின் அச்சாணிக்குள்ளேயே மோடி அரசுகூடச் சுழன்று கொண்டிருக்கின்றது. தமிழினத்திற்கு உரிமையான தேசம் இன்று மீண்டும் ஒரு முறை, தமிழனத்தின் இக்காலத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்வோராலேயே மறுதலிக்கப்பட்டுள்ளது.
தமிழர்க்கு உரிமையான தேசம் தமிழர்க்கே உரியது என்பதை 1799 ஆம் ஆண்டே, உலகையே ஆள ஆரம்பித்த பிரித்தானியரே ஒத்துக் கொண்டுள்ளனர். பிரித்தானியக் காலனித்துவக் காரியதரிசியான சேர் கியூக் கிலெகொம் மிகவும் புராதனகாலத்திலிருந்தே இரண்டு இனங்கள் தமக்கான இரு பிரிக்கப்பட்ட பிரதேசங்களை உடையதாக இருந்து வந்துள்ளது. இந்த இரு இனமும் தமக்கான இராச்சியங்களுடன் தனித்த கலாச்சாரங்களுடனும் பழக்கவழக்கங்களுடனும் வாழ்ந்து வருகின்றன என்று அன்றே தமிழரின் தனித் தேசத்தினை அங்கீகரித்துத் தமிழரின் தேசத்தின் இருப்பை உறுதி செய்துள்ளன.
ஆனால் இன்று எமது பிரதிநிதிகளாகத் தம்மைக் காட்டிக் கொண்டு சென்றுள்ளவர்கள் எம்மைத் தேசமில்லாத மக்களாகப் பிரகடனப்படுத்தவே முயல்கின்றார்கள். எமது இனத்தின் விடுதலையும் எமது இனத்தின் பேரிழப்பும் இன்று எமது பிரதிநிகள் என்று கூறுவோரின் அரசியலிற்காகவும் இந்தியாவின் தொடர்ச்சியான அரசியற் கொள்கைகளாலும் தத்தமது அரசியல் இலாபத்திற்காகவும் பலியிடப்படுகின்ற
எமது இனத்தின் விடுதலை, சுயநிர்ணய உரிமை, தமிழீழத் தனியரசு என்பன ஓர் அரசியல் ஆயுத மாக இன்று பல தேசங்களினால் கையாளப்படுகின்றன. தத்தமது இலக்குகளிற்காக இந்திய அரசு முதற் கொண்டு பல அரசாங்கங்கள் இந்த ஆயுதத்தைக் கையிலெடுத்து அரசியல் நடாத்திவருகின்றன. தழிழரின் விடுதலைக் கவசங்களான விடுதலைப் புலிகள் தழிழீழத் தனித் தேசத் திற்கான போராட்டத்தில் எந்தவிதமான விட்டுக் கொடுப்பையும் செய்யாது போராடிவந்தார்கள். அதனால் இன்று தமக்கான தலையாட்டி பொம்மைகளான ஓர் அணியை உருவாக்கி இன்று தழிழரின் கனவுகளைத் தவிடுபொடியாக்கும் அரசியற்தீர்வை முன்வைத்து அதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குக் கொள்ளி வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
அதற்கான தலையாட்டி பொம்மைகளாக இந்தியாவின் கயிறுகளிற்கு ஆடச் சம்பந்தன் அணி சென்றுள்ளது. இப்படியான எமதின விடுதலையை விற்கும் வியாபாரி களிடம் இருந்து எமக்கான விடுதலைமூச்சுக் காக்கப்படல் வேண்டும். இனவிடு தலைக்காகப் போராடிய எமது மக்கள் மீது பாரிய இனப்படு கொலையை மேற்கொண்டு இலட்சக்கணக்கான மக்களைக் கொன் றொழித்த சிறீலங்கா இனவெறி அரசின் இனப்படுகொலைகளையும் மறைக்க முயலும் இந்த அரசியல் வியாபாரிகளிடமிருந்தும் நாம் இனப்படு கொலையை உலகிற்குத் தெரிவிக்க முன்வரவேண்டும்.
எமக்கான ஒரு முக்கிய சந்தர்ப்பமாக எமது குரல்கள் சர்வதேசத்தில் ஒலிப்பதற்கான ஓர் வெளி எமக்கு வழங் கப்பட்டுள்ளது. மிகவும் இரகசியத் தன்மை பேணப்படும் என்ற உறுதியுடன் எம் இனத்தின் சாட்சியங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவினரால் கோரப்படுகின்றன. பாதிக்கப்பட்ட அனைவரும் தமக்கான நீதியைப் பெறுவதற்கான, இனவழிப்புக்கள் மேற்கொண்ட சிங்கள அரசினை உலகக் குற்றவா ளிக் கூண்டில் நிறுத்துவதற்கான சந்தர்ப்பம் அனைவரிற்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனை எமக்கான ஒரு வரலாற்றுக் கடமையாக அனைவரும் பொறுப்பேற்று ஒன்றாக நின்று செய்யவேண்டிய தருணம் இது.