தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழினி எழுதியதாக வெளியிட்ட ‘கூர்வாள்’ கோத்தபாயவின் கைவண்ணமே!

optimized-img_1894-4-450x236தமிழினி அக்காவினால் எழுதியதாக வெளியிடப்பட்ட புத்தகம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கை வண்ணமே என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

2017ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட விவாத்த்தில் பாதுகாப்பு அமைச்சு மீதான விவா தத்தில் பாதுகாப்பு அமைச்சு தொடர்பான நிதி ஒதுக்கீட்டின்போது பொது எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கெகலிய ரம்புக்கல தனது உரையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தமிழ்ச்செல்வன் தொடர்பில் அதே அமைப்பைச் சேர்ந்த தமிழினியே விபரித்ததாக குறிப்பிட்டார்.

இதே விவாதத்தினில் கருத்து வெளியிட்ட பீல்ட் மார்சல் சரத் பொன்சா யுத்தம் முடிவுற்ற மையினாலேயே வடக்கின் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக நாடாளுமன்றம் வருகின்றன எனவும் தெரிவித்தார் .

இவற்றிற்குப் பதிலளித்து உரையாற்றும்போதே சாள்ஸ் நிர்மலநாதன் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

தமிழினி அக்காவினால் எழுதியதாக வெளியிடப்பட்ட புத்தகம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கை வண்ணமே . அதனை தமிழினி இறந்த பின்பு மேற்கொண்ட செயல் அதில் உண்மைகிடையாது.

அதேபோல் வடக்கின் யுத்தம் முடிந்தமையால் நாடாளுமன்றத்திற்கு சந்தோசமாக இருந்துவிட்டுச் செல்வதற்காக நாம் இங்கு வரவில்லை. மாறாக அந்த யுத்தத்தினால. எம் மக்கள் பட்ட வேதனைகளையும் கொடுமைகளையும் இழப்புக்களையும் சுட்டிக்காட்டுவதற்காகவே நாடாளுமன்றத்திற்கு வருகின்றோம். என்றார்.

Comments
Loading...