Designed by Iniyas LTD
தமிழின விடிவிற்காய் தம்மை ஆகுதியாக்கியவர்கள் கரும்புலிகள்…
தாயிற்காய் உயிரை கொடுத்தவர்கள் இல்லை,, ஆனால் எம் தாய் மண்ணிற்காய் கரும்புலிகளாய் மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான நாள் இன்றைய நாள்.
கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள்.
கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள் இன்றைய தினம் 31 ஆம் வருட கரும்புலிகள் தினம்.
31 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும் கரும்புலிகளின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு ஈழத் தமிழர்களிடமும், உள்ளிருந்து எரியும் நெருப்பாய் கனன்றுகொண்ணே இருக்கின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான கப்படன் மில்லர் 1987 யூலை 5ம் நாள் சிறிலங்கா பேரினவாத அரசுக்கும், சிங்கள் இராணுவ காடையர்களிற்கும் எதிராக, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் இராணுவ முகாமின் மீது தற்கொடைத் தாக்குதலை நடத்திய நாளாகும்.
இந்த பூமியில் பிறந்தவர்கள் எல்லோரும் என்றோ ஒரு நாள் இறந்தே தான் தீரவேண்டும். அது எந்த வடிவில் எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் எம் கரும்புலிகள் காலன் வரும் நாளை அறிந்தவர்கள்.
எனினும் பெற்ற தாயிடம் கூட அந்த உண்மையினை அவர்கள் கூறியதில்லை. எம் தலைவன் காட்டிய வழியில் சென்று பகைவர்களை வேரறுத்தவர்கள்.
தரை, கடல், வானம், என எங்கெங்கு எல்லாம் எமது பகைவர்கள் வீற்றிருந்தார்களோ – அங்கங்கு வைத்தே அவர்களின் ஆணிவேர்களைப் பிடுங்கியவர்கள்..
உலகமே வியந்து நோக்க தமிழரது அரசியல் தாகத்தை இந்த உலகின் முற்றத்தில் முரசறைந்து சொன்னவர்களுக்கான நாள்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அன்று தொட்டு பல தற்கொடைத் தாக்குதல்களை எமது வீர மறவர்கள் தமிழீழ மக்களின் தாயக விடுதலைக்காக நிகழ்த்தியுள்ளார்கள்.
தமிழீழ விடுதலையை மட்டுமே தமது தாரக மந்திரமாக கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராமல், எத்தடை வரினும் அதை உடைத்தெறிந்து தமது கடமையை செய்த காவிய நாயகர்கள் தினம் இன்று.
தமது முகத்தையோ, முகவரியையோ, காட்டாமல், தமக்கென சுயநல பெருமை தேடாமல் தமிழ்த் தேசத்தின் இருப்பை நிலை நாட்ட மரணத்தை வா என வரவேற்ற இரும்பு மனிதர்கள் அவர்கள்..
அடையாளம் மறைத்து தமிழீழ விடுதலைக்கு தமது அர்ப்பணிப்பாலும் செயலாலும் தம்மை உரமாக்கி தமிழினத்தின் வரலாற்றில் தம்மை அழியாத அடையாளமாய் இட்டுச் சென்றுள்ள நெருப்பு மனிதர்கள் நினைவுகூரும் நாள் இன்று.. .
அவர்கள் இல்லாமல் போனவர்கள் அல்ல, எம் இனத்திற்காய் தமிழீழத்திற்காய் மகிழ்வோடு பகைவனை அழித்தவர்களின் உன்னத நாள் இன்று..
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா..
தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்..
– யாழ் கனக சனா
