Designed by Iniyas LTD
இன்றைய இராசிபலன்கள் ..
மேஷம்
இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றமடையத் தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்வதைச் செய்வதன் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள். குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும்.அவர்களுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.
ரிஷபம்
இன்று புதிதாகச் செய்யும் காரியங்களில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்புக் கூடும். பெரியவர்கள் சொல்படி கேட்டு நடப்பது வெற்றி பெற உதவும். அலைச்சல் ஏற்படலாம். உங்களது செயல்களுக்குப் பாராட்டுக்கள் கிடைக்கப் பெறுவீர்கள். சுக்கிரனின் சஞ்சாரத்தால் அடுத்தவர் மூலம் மனசங்கடம் உண்டாகும்.
மிதுனம்
இன்று அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்திற்குத் தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்திலிருந்த சண்டைகள் நீங்கும். தம்பதிகளிடையே இருந்த இடைவெளி குறையும்.
கடகம்
இன்று திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும். தோழிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த மந்தநிலை மாறும்.
சிம்மம்
இன்று வாழ்வில் சுபீட்சம் ஏற்படும்.கோர்ட் வழக்குக் காரியங்களில் தடைதாமதம் ஏற்படலாம். பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எந்த ஒருவேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். ராசிநாதனின் ஐந்துநிமிட சஞ்சாரத்தால் புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
கன்னி
இன்று தொழில் வியாபாரத்தில் புத்தி சாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள். சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்திலிருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதன்மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.
துலாம்
இன்று பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காகப் பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த வேலைகளைச் செய்யும் போது கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். காரிய அனுகூலம் உண்டாகும்.
விருச்சிகம்
இன்று எந்தக் காரியத்தைச் செய்தாலும் தடை, தாமதம் ஏற்படலாம். பணவரத்துக் குறையும். உடல் சோர்வு ஏற்படும். வீண் பிரச்சினைகள் தலைதூக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டுத் தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலைப் பளு கூடும்.
தனுசு
இன்று குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளுக்காகச் செலவு செய்ய வேண்டியிருக்கும். தீ, ஆயுதங்களைக் கையாளும் போது கவனம் தேவை. வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது. உறவினர்களிடம் பேசும் போது கவனமாகப பேசுவது நல்லது. பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம்.
மகரம்
இன்று உத்தியோகத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும். நீண்ட நாள் பணப் பிரச்சினைகள் தீரும். பொருள் சேர்க்கை ஏற்படும். மனஅமைதி கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புக்கள் விலகும். கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் ஏற்படலாம் கவனம் தேவை.
கும்பம்
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணப் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாகப் பலன் கொடுக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் தீரும். திருமணக் காரியங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
மீனம்
இன்று எதிர்ப்புக்கள் விலகும். தடைப்பட்ட காரியம் நடந்து முடியும். பணவரத்துத் திருப்தி தரும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப் பிரச்சினை தீரும். குடும்ப நன்மை ஏற்படும். ஆனாலும், சந்திரனின் சஞ்சாரத்தால் மனதில் ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். திடீர் பணத் தேவை ஏற்படலாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும்.