Designed by Iniyas LTD
தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக கொண்டுவரப்பட்ட ஆயுதங்களே தற்போது பாதாள உலகக் குழுவிடம்….
தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக கொண்டுவரப்பட்ட ஆயுதங்களே தற்போது பாதாள உலகக் குழுவிடம் உள்ளதாக தாம் கருதுவதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நிரந்தர நீதாய மேல்நீதிமன்றில் நேற்றையதினம் முன்னிலையான பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதோடு தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக கொண்டுவரப்பட்ட ஆயுதங்களை பல்வேறு தரப்பினர் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோத்தபாய ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..