Designed by Iniyas LTD
தமிழ்நாடு நீதிபதிகள் சங்கத் தலைவராக தொழிலாளர் முதன்மை நீதிபதி எஸ்.நம்பிராஜன் தேர்வு
தமிழ்நாடு நீதிபதிகள் சங்கத்தின் தலைவராக தொழிலாளர் நீதிமன்ற முதன்மை நீதிபதி எஸ்.நம்பிராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், தமிழ்நாடு நீதிபதிகள் சங்கத்துக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தொழிலாளர் நீதிமன்ற முதன்மை நீதிபதி எஸ்.நம்பிராஜன், சங்கத்தின் தலைவராகவும், செயலாளராக தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணையத்தின் நிர்வாக அதிகாரி ஏ.ரமேஷ், துணை தலைவர்களாக ஆர்.என்.மஞ்சுளா, ஜெயராஜ், பொருளாளராக ராதாகிருஷ்ணன் மற்றும் 16 பேர் நிர்வாகக்குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.