தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழ்நாட்டில் உள்ள 4000 ஏதிலிகளை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை…

தமிழ்நாட்டில் தங்கியுள்ள 4000 ஈழ ஏதிலிகளை  கப்பல் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில்  இலங்கை  அரசாங்கத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு தகவல் அனுப்பியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை இத்தகவலை பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமி  தனது வலைத்தள பக்கமொன்றில் இதனை கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதில் “இலங்கை அகதிகளை தாயகத்துக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு, கடித மூலம் விடுத்த கோரிக்கையை ஏற்று, நடவடிக்கை எடுத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கு தனது நன்றி என கூறியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பில் உள்ள இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் அசோக் ராவ் கடந்த மாதம் , தலைமன்னார் இறங்குதுறையின் நிலையைப் பார்வையிட்டிருந்தாகவும்,

தலைமன்னாருக்கு கப்பல் மூலம், அகதிகளை அனுப்பி வைக்கும் நோக்கில், அவரது இந்த ஆய்வுப் பயணம் இடம்பெற்றிருக்கலாம் எனவும்  கருதப்படுகின்றமை குரிப்பிடத்தக்கது.

Comments
Loading...