தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாட்டை விட்டு வெளியேறுமுன் விஜயகலா மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதவி விலகிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

பிவிதுரு ஹெல உறுமயவின் பரப்புரைச் செயலர் துசார திசநாயக்க இதுதொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில்,

“விடுதலைப் புலிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட விஜயகலா மகேஸ்வரன் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு முன் .சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாம் கோருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதோடு , விஜயகலா மகேஸ்வரனி ன் உறுப்புரிமையை ஐக்கிய தேசியக் கட்சி ரத்துச் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை,விஜயகலா மகேஸ்வரன் தனிப்பட்ட பயணமாக பிரித்தானியா செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...