தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழ்நாட்டில் கடவுளின் பெயரில் பின்னை விலைமாதாக்கும் கொடுமை!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கனக்கம்மாச்சத்திரம், வீரராகவபுரம், கூர்மவிலாசபுரம் போன்ற ஊர்களில் ஆண்டுதோறும் மாத்தம்மன் திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் மகளிரை இழிவுபடுத்தும் விதமாக சில வினோத நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

குடும்பத்தில் நிலவும் பிரச்சனை, தீராத நோய் என்றால் அதனைத் தீர்ப்பதற்கு நேர்த்திக்கடனாக, தங்களது குடும்பத்தில் 10 வயது முதல் 24 வயது வரை உள்ள ஒரு பெண்ணை மாத்தம்மனுக்கு நேர்ந்துவிடுவதாக கூறி, அந்த பெண்ணை விலைமாதாக விருப்பப்பட்டு அனுப்பி வைக்கிறாரர்கள்.

மேள தாளத்துடன் அந்த பெண்ணை அலங்கரித்து கோவிலுக்குள் அனுப்பி வைக்கின்றனர். அங்கு 5 சிறுவர்கள் சேர்ந்து பெண்ணின் ஆடைகளை களைகின்றனர். அதன் பின்னர் அந்த பெண் படிப்பை தொடர முடியாது. அவர் விருப்பப்படும் எந்த ஆணுடன் வேண்டுமானாலும் வாழலாம். குழந்தை பெற்ற பின்னர் பிடிக்காவிட்டால் குழந்தையுடன் அந்த நபரை அப்படியே விட்டுவிட்டு வேறு ஆண்களுடன் செல்லலாம்.

இந்த கொடுமையான நிகழ்வுக்கு காவல் துறையினரே பாதுகாப்பு கொடுக்கின்றனர் என்பது தான் வேடிக்கையாக உள்ளது.

இதுவரை இந்த அத்துமீறலை தட்டிகேட்க அரசின் சமூக நலத்துறையோ, பெண் உரிமை மீறலோ அல்லது மாதர் சங்கமோ முன்வரவில்லை என்பது தான் மிகுந்த வேதனையாக உள்ளது.

Comments
Loading...