Designed by Iniyas LTD
தமிழ்நாட்டில் சென்னையில் அதிகபட்சமாக 108 டிகிரி வெப்பம் கொளுத்தியது : பொதுமக்கள் அவதி
தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கத்திரி வெயிலின் தாக்கத்தால் சென்னையில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. வேலூரில் 107.9 டிகிரியும், திருநெல்வேலி மற்றும் மதுரையில் 101.4 டிகிரியும், திருச்சியில் 100.9 டிகிரியும், புதுச்சேரியில் 104.7 டிகிரியும் பதிவாகியுள்ளது.
மேலும் ஒரு வாரக் காலத்திற்கு வெப்பத்தின் கடுமையான தாக்கம் நீடிக்கும். என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுவரையிலும் வெயிலின் கொடுமைக்கு நாடு முழுவதும் 500 பேர் உயிரிழந்துள்ளனர்.