தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழ்,முஸ்லிம்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்த சூழ்ச்சி!

423bd28f-8e6c-48b9-bf0b-20ab92de9df01கிழக்கு மாகா­ணத்தில் தமிழ், முஸ்லிம் சமூ­கங்­க­ளி­டையே நிலவும் சில முரண்­பா­டு­களை, பூதா­க­ர­மாக மாற்­று­வ­தற்கு சில சக்­திகள் பாரிய சூழ்ச்­சி­களை மேற்­கொண்டு வரு­வதை எம்மால் உணர முடி­கி­றது என கல்­முனை மாந­கர முதல்வர் எம். நிஸாம் காரி­யப்பர் தெரி­வித்துள்ளார்.
கல்­முனை மாந­கர சபையின் மாதாந்த சபை அமர்­வுக்கு தலைமை வகித்து விசேட உரை நிகழ்த்­து­கை­யி­லேயே அவர் இதனைக் குறிப்­பட்டார்.
அங்கு அவர் மேலும் பேசு­கையில்;
“கடந்த சில நாட்­க­ளாக எனக்கு கிடைக்கும் தக­வல்­களை பார்க்­கின்­ற­போது, எதிர்­கா­லத்தில் கிழக்கு மாகா­ணத்தில் வாழ்­கின்ற தமிழ், முஸ்லிம் சமூ­கங்­க­ளி­டையே ஏற்­ப­டக்­கூ­டிய நல்­லு­றவை மிகவும் இல­கு­வாக உடைக்கக் கூடிய கார­ணி­களை அறிந்து கொண்­டுள்ள தீய சக்­திகள், அதற்­கான நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­ற­னவா என்­கின்ற அச்சம் ஏற்­பட்­டுள்­ளது.
நாம் விரும்­பியோ விரும்­பா­மலோ இந்த சூழ்ச்­சி­களை இரண்டு சமூ­கத்­தி­னரும் இணைந்து முறி­ய­டிக்க வேண்­டிய தரு­ணத்தில் இருந்து கொண்­டி­ருக்­கின்றோம். எமது மாந­கர சபை உறுப்­பி­னர்கள் மத்­தியில் இருக்­கின்ற நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் நாம் எல்­லோரும் ஒன்­றி­ணைந்து இந்த சவால்­களை எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ளது.
எமது மாந­கர சபையை பொறுத்­த­வரை எந்­த­வொரு சமூ­கத்­திற்கும் அநி­யாயம் இழைக்­காத வகையில் மிகவும் பக்­கு­வத்­துடன் எமது செயற்
பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்­டிய பாரிய பொறுப்பை சுமந்து கொண்­டி­ருக்­கின்றோம். அந்த அடிப்
ப­டையில் நாம் சில விட­யங்­களை பிரத்­தி­யே­க­மாகப் பேசி, சில இணக்கப்பாடுகளைக் கண் டுள்ளோம். அதன் மூலம் எவர் எந்த ரூபத்தில் வந்தாலும் எம்மை உடைக்க முடியாது என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

Comments
Loading...