தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடக்கு கிழக்கு இணைக்க கோருவது சட்டத்துக்கு அமைவானதே!

SENவடக்கு கிழக்கு மாகா­ணங்­களை இணைக்­கு­மாறு கோரு­வது அர­சி­ய­ல­மைப்­பிற்கு அமை­வா­னது என்று கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட சிரேஷ்ட விரிவுரையாளர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது;
அண்மைக் காலங்­களில் வடக்கு கிழக்கு இணைப்பு பற்­றிய பல்­வேறு கருத்­துக்கள் தெரிவிக்­கப்­பட்டு வரு­கின்­றன. தென்­னி­லங்­கையைச் சேர்ந்த சில அர­சியல் கட்­சி­களும் அர­சி­யல்­வா­தி­களும் வடக்கு கிழக்கு இணைப்பை மீள கோரு­வது அர­சி­ய­ல­மைப்­பிற்கு எதி­ரா­னது எனவும் வடக்கு கிழக்கை உயர்­நீ­தி­மன்றம் பிரித்து வைத்­துள்­ளதால் இம் மாகா­ணங்­களை மீள இணைக்கக் கோரு­வது உயர்­நீ­தி­மன்­றத்தை அவ­ம­திப்­ப­தாகும் எனவும் கருத்துத் தெரிவிக்­கின்­றார்கள்.
வடக்கு – கிழக்கை இணைக்­கு­மாறு கோரு­வது எவ்­வ­கை­யிலும் அர­சி­ய­ல­மைப்­பிற்கு எதி­ரா­ன­தா­கவோ அல்­லது உயர்­நீ­தி­மன்­றத்தை அவ­ம­திப்­ப­தா­கவோ ஆகாது. அர­சி­ய­ல­மைப்­பிற்கு கொண்­டு­வ­ரப்­பட்ட பதின்­மூன்­றா­வது திருத்­தத்தின் மூலம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டதே மாகா­ணங்­களை இணைப்­பது என்­ப­தாகும். பாரா­ளு­மன்­ற­மா­னது சட்­டத்தின் மூலம் அடுத்­துள்ள இரண்டு அல்­லது மூன்று மாகா­ணங்­களை தனி­யொரு முத­ல­மைச்­சரைக் கொண்ட தனி­யொரு மாகாண சபை­யாக இணைக்­கலாம் என்­பதை பதின்­மூன்­றா­வது திருத்­த­மா­னது அர­சி­ய­ல­மைப்பில் நிரந்­த­ர­மா­ன­தாக சேர்த்­துள்­ளது.
வடக்கு கிழக்கு இணைப்பைப் பிரிக்கும் வகையில் உயர்­நீ­தி­மன்­றத்தால் 2006 இல் வழங்­கப்­பட்ட தீர்ப்­பா­னது வடக்கு கிழக்கு இணைப்புப் பற்­றிய ஏற்­பா­டு­களைக் கொண்­டி­ருந்த மாகாண சபைகள் சட்­டத்­தி­லுள்ள நிபந்­த­னை­க­ளுக்கு மாறாக அவ­ச­ர­காலச் சட்­டத்தைப் பயன்­ப­டுத்தி வடக்கு கிழக்கு இணைப்பை நீடித்துச் சென்­ற­மை­யா­னது அர­சி­ய­ல­மைப்­பிற்கு மாறா­னது என்­ப­தாக மட்­டுமே இருந்­தது. வடக்கு கிழக்கு மாகா­ணங்­களை இணைப்­பது அர­சி­ய­ல­மைப்­பிற்கு மாறா­னது என்­ப­தாக உயர்­நீ­தி­மன்­றத்தின் தீர்ப்பு அமைந்­தி­ருக்­க­வில்லை.
அடுத்­துள்ள மாகா­ணங்­களை ஒரே மாகா­ண­ச­பை­யாக இணைப்­பது என்­பது இன்­னமும் அர­சி­ய­ல­மைப்பின் பாக­மா­கவே இருந்து வரு­கின்­றது. வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்­பாக பாரா­ளு­மன்­றத்தின் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையைப் பெற வேண்­டிய அவ­சி­யமோ அல்­லது சர்­வ­ஜன வாக்கெடுப்பிற்குச் செல்ல வேண்டிய அவசியமோ இல்லை. பாராளுமன்றமானது சாதாரண பெரும்பான்மை மூலம் இருந்து வரும்
மாகாண சபைகள் சட்டத்தை திருத்துவதன் மூலம் அல்லது புதிதாக ஒரு சட்டத்தை ஆக்குவதன் மூலம் இதனைச் செய்யலாம்.

Comments
Loading...