தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழ் இளம் மாணவியொருவரின் சடலம் மீட்பு – மட்டக்களப்பில் சம்பவம்..

மட்டக்களப்பில் தமிழ் இளம் மாணவியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை க.பொ.த உயர்தரத்தில் பயிலும் வசந்தராஜா தேவயாணி (18 வயது) என்ற  மாணவி பாடசாலைக்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில்  கல்லடி பாலத்திற்கு அருகில்  குறித்த மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாணவியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடயவியல் பிரிவு  மற்றும் காத்தான்குடி பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை  மாணவியின் மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...