தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தற்போதைய இலங்கை அரசியல் சூழலில்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடப்பாடு பற்றி!…

தாயக விடுதலையில் பங்காற்றிய புலம்பெயர் நண்பர்களின் அரசியல் அமைப்பான
“தமிழர் விடுதலை நடுவம்” (பிரித்தானியா)

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கீட்டின் சூழ்நிலையில் மக்கள் ஆணை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடப்பாடு என்ன என்பதை வலியுறுத்தி அறிக்கை வெளியிடுகிறது.

இலங்கையில், தமிழரின் அரசியல் விடுதலையின் நியாயங்களையும் தமிழரின் அரசியல் உரிமை அபிலாசைகளையும் முன் கொண்டு செல்லவேண்டியதன் காரணமாக தமிழீழ நடைமுறை அரசால் உருவாக்கப்பட்டதே தமிழ் தேசிய கூட்டமைப்பு.

இலங்கை அரசியலில் பேரம் பேசும் வாய்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஈழத்தமிழினத்தின் தேசிய அரசியல் அடிப்படைகளான

1. வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்திற்கான சுயாட்சி அடிப்படையிலான அரசியல் தீர்வு

2.இராணுவத்தின் பிடியிலுள்ள மக்களின் நிலங்களை விடுவித்தல்.

3.தமிழ் பிரதேசங்களில் ஆக்கிரமித்துள்ள இராணுவத்தை விலக்குதல்.

4.விசாரணையின்றித் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை

5.போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார அபிவிருத்தி

உள்ளடங்கலாக
ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை அமைப்பினால் கொண்டுவரப்பட்டு இலங்கையால் ஏற்கப்பட்ட கடப்பாடுகளை உனடியாக நிறைவேற்றல்.

முதலிய கோரிக்கைகளை நிபந்தனையாக முன்வைத்தே எந்த கட்சி பிரதம மந்திரிக்கான ஆதரவும் வழங்கப்பட வேண்டும்.

இந்த நிலமையை ஒப்பற்ற தியாகங்கள் புரிந்து போராடி திட்டமிடப்பட்ட இனவழிப்பை எதிர்கொண்டு வாழும் ஈழத் தமிழருக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தற்போதைய நிலை தொடர்பாக ஐரோப்பிய தமிழ் ஊடகங்களும் அமைப்புக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மேற்கூறப்பட்டவாறு வலியுறுத்தி அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழர் விடுதலை நடுவம்.

Comments
Loading...