தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மாகாணமட்ட போட்டியில் சாதனை படைத்த வவு / கல்மடு மகாவித்தியாலயம்

2015 ஆம் ஆண்டிற்கான தமிழ் கலைத்திறன் மாகாணமட்ட போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா 11/05/2015 அன்று யாழ் / வேம்படி பெண்கள் பாடசாலையில் நடைபெற்றது.piri

இதில் நான்காம் பிரிவில் கவிதைப்போட்டியில் வவுனியா கல்மடு மகாவித்தியால மாணவி ரஞ்சித் சாயிப்பிரியங்கா முதலாம் இடத்தையும் அதே பிரிவு சிறுகதைப் போட்டியில்  சிவயோகநாதன் டனுஜா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

வெற்றியீட்டிய மாணவர்களுக்கு வெற்றிச்சான்றிதழ் அளித்து கௌரவிக்கப்பட்டுள்ளது. இப்பரிசளிப்பு விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் ,பெற்றோர்கள், கல்விப் பணிப்பாளர்கள், அமைச்சர்கள் ,என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் வெற்றியீட்டிய மாணவிகள் தேசியமட்ட போட்டிக்கு செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...