தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆஸ்திரேலியாவில் 2000 ஆண்டுகள் பழமையான முத்து கண்டெடுத்துள்ளனர்!

Natural-Pearlsஆஸ்திரேலியாவில் மிகவும் அரிதான 2000 ஆண்டுகள் பழமையான “முத்து” ஒன்றை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

மேற்கு ஆஸ்திரேலியா பகுதியில் உள்ள நோர்த் கிம்பெர்லி கடற்பகுதியில் தொல்பொருள் ஆய்வாளர்கள் தங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் இந்த அரிய வகை முத்து கடலின் அடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் நோர்த் கிம்பெர்லி கடற்பரப்பானது,ஆஸ்திரேலியாவின் பூர்வீக குடிகள் வாழ்ந்த கடற்பரப்பாகும்.கடந்த நூற்றாண்டு வரை,கிம்பெர்லி கடற்பரப்பானது, ஆஸ்திரேலியாவிலேயே முத்துக்குளிக்க மிக ஏற்ற இடமாக இருந்து வருகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, வோல்லோங்கோங் (Wollongong ) பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியராக பணிபுரியும், ஸ்சபோ(Szabo) என்னுடைய ஆராய்ச்சியில் பல வகையான முத்துக்களை ஆஸ்திரேலியாவின் கடற்பரப்பில் இருந்து கண்டுபிடித்துள்ளேன்,ஆயினும் இயற்கையில் உருவாகும் இவ்வாறான முத்துக்கள் மிகவும் அரிதானவை என கூறினார்.

Comments
Loading...