Designed by Iniyas LTD
தமிழ் – முஸ்லிம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த காடுகளை எரித்து நாசப்படுத்திய சிங்கள இனவாதிகள்!
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவு கூலாமுறிப்பு பிரதேசத்தில் முஸ்லிம் மக்களை குடியமர்த்த முற்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் இளைஞர்கள் பாரிய போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இதனை சகிக்க முடியாத சில இனவாதிகள் இன்று கூலாமுறிப்பு காடுகளுக்கு தீ வைத்து நாச வேலையை செய்துள்ளனர்.
தமிழர்களுக்கும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் கிழக்கிலும் வடக்கிலும் சிங்கள இனவாதிகள் திட்டமிட்டு பல சதி வேலைகளை செய்து வருகின்றனர்.
தமிழர்களை ஒன்றுபட விடக்கூடாது என்பதில் சிங்கள இனவாதிகள் இப்படியான நாச வேலைகளை காலம்தோறும் செய்து வந்துள்ளமை யாவரும் அறிந்ததே.
அந்த வகையில் வடக்கில் தமிழர் பிரதேசத்தில் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்த ஸ்ரீலங்கா இராணுவத்தினர் இன்னமும் காணிகளை ஒப்படைக்காத நிலையில், நில மீட்பிற்காக தொடர்ந்து போராடி வரும் இந்த வேளையில் அதனை மழுங்கடிக்க வேண்டுமென்றே முஸ்லிம் மக்களை குடியமர்த்த ஸ்ரீலங்கா அரசு திட்டமிட்டு இப்படியான நாச வேலையை செய்துள்ளமை தமிழ் மக்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சதி வலையில் தமிழ் மக்களும் தமிழ் முஸ்லிம் மக்களும் சிக்காது ஒற்றுமையுடன் எதிர்த்து நிற்பதே காலத்தின் தேவை.


