தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தற்கொலை தாக்குதல் தொடர்பில் கோத்­த­பாய சாட்சியம்!

Gotabaya_CIதற்­கொலை தாக்­குதல் ஊடாக கொழும்பு, பித்­தளை சந்­தியில் வைத்து தன்னை கொலை செய்ய முயற்­சித்த சம்­பவம் குறித்து இது வரை தான் எந்த தரப்­பி­டமும் முறைப்­பா­ட­ளிக்­க­வில்லை எனவும் சம்­பவம் இடம்­பெற்று ஏழு வரு­டங்­களின் பின்னர் கடந்த 2013 ஆம் ஆண்டில் மட்டும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு ஒரே ஒரு வாக்கு மூலம் மட்டும் வழங்­கி­ய­தா­கவும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ நேற்று சாட்­சி­ய­ம­ளித்தார்.

பயங்­க­ர­வாத விவ­கா­ரங்கள் குறித்த வழக்­கு­களை விசா­ரணை செய்து முடிக்க ஏற்­ப­டுத்­தப்­பட்ட விசேட மேல் நீதி­மன்றின் ஆணை­யாளர் ஐராங்­கனி பெரேரா முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளிக்கும் போது, 2 ஆவது சந்­தேக நபரின் சட்­டத்­த­ர­ணி­யான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கே.வி. தவ­ரா­சாவின் குறுக்கு கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் இந்த சாட்­சி­யத்தை பதிவு செய்தார்.

அத்­துடன் தான் பாது­காப்பு செய­லா­ள­ராக பத­வி­யேற்கும் போது போர் நிறுத்­த­மொன்று அமுலில் இருந்­த­தா­கவும், எனினும் அதன்­போதும் புலிகள் போரொன்­றுக்கு தயா­ரா­கிக்­கொண்­டி­ருந்­த­தாக உளவுத் தக­வல்கள் ஊடாக தாம் உறுதி செய்­து­கொண்­ட­தா­கவும் அக்­கா­லப்­ப­கு­தியில் புலி­க­ளிடம் சிறிய ரக விமா­னங்கள் இருந்­த­தா­கவும் அவர் சாட்­சி­ய­ம­ளித்தார்.

அத்­துடன் புலிகள் போர் நிறுத்­தத்தை முறித்து தாக்­குதல் நடத்­தினால் மறு­க­ணமே பதில் தாக்­குதல் நடத்தும் வகையில் தாமும் உளவுத் தக­வல்­களை சேக­ரித்து 76 விசேட படை­ய­ணி­களை உரு­வாக்கி போருக்கு குறித்த போர் நிறுத்த காலப்­ப­கு­தியில் தயா­ரா­ன­தா­க வும் அவர் மன்றில் தெரி­வித்தார்.

கொழும்பு கொள்­ளுப்­பிட்­டியில் உள்ள பித்­தளை சந்திப் பகு­தியில் கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷவை இலக்கு வைத்து குண்டு தாக்­குதல் நடத்­தப்­பட்­டது.

இதன்­போது கோத்­த­பாய ராஜ­பக் ஷவின் பாது­காப்பு அதி­கா­ரிகள் மூவர் உயி­ரி­ழந்­த­துடன் மேலும் 9 உத்­தி­யோ­கத்­தர்கள் படு­கா­ய­ம­டைந்­தனர்.

இந்த சம்­பவம் தொடர்பில் தற்­கொலை குண்­டு­தா­ரி­யான பால­சிங்கம் விஜேகுமார் அல்­லது அப்துல் லதீப் முஹம்மது பரீத் அல்­லது கதிர் அல்­லது அன்­ப­ழகன் என்­ப­வ­ருடன் சேர்ந்து முன்னாள் பாது­காப்பு செய­லா­ளரை கொலை செய்ய திட்­ட­மிட்­டமை, பாது­காப்பு தரப்­பினர் மூவரைக் கொலை செய்­தமை, அதற்கு ஒத்­தா­சை­யாக இருந்­தமை உள்­ளிட்ட 13 குற்றச்சாட்­டுக்­களின் கீழ் 5 சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக சட்ட மா அதிபர் கொழும்பு சிறப்பு மேல் நீதி­மன்றில் வழக்குத் தாக்கல் செய்­துள்ளார்.

41 சாட்­சி­யா­ளர்கள், 13 வழக்குப் பொருட்­க­ளுடன் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள இந்த வழக்கில் பொன்­னு­சாமி, சிவ­லிங்கம் அருள், பத்­ம­நாதன் ஐயர், சந்­தி­ரபோஸ், செல்­லையா தயாளன் ஆகி­யோ­ருக்கு எதி­ராக சட்ட மா அதிபர் குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­துள்ளார்.

ஐந்­தா­வது சந்­தேக நபர் இல்­லா­ம­லேயே இந்த வழக்கு விசா­ரணை செய்­யப்­பட்டு வரு­கி­றது. சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக பொதுமக்கள் பாது­காப்பு சட்­டத் தின் 5 ஆவது அத்­தி­யா­யத்தின் கீழும் தண்­ டனை சட்டக் கோவையின் 113 (அ), 102 உள்­ளிட்ட பிரி­வு­களின் கீழும் இந்த வழக்கு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட 1405/14 ஆம் இலக்­கத்தை உடைய அதி விசேட வர்த்­த­மா­னியின் பிர­ காரம் பிர­க­டனம் செய்­யப்­பட்ட அவ­சர கால சட்­டத்தின் ஏற்­பா­டு­க­ளுக்கு அமை­வா­ கவும் குற்றச்சாட்­டுக்கள் பதிவு செய்­யப்­பட் ­டுள்­ளன.

இந் நிலையில் இந்த வழக்கு மீதான சாட்சி விசா­ர­ணைகள் நேற்று ஆரம்­ப­மா­கின.

இதன்­போது சந்­தேக நபர்­களில் ஆஜ­ரா­கி­யி­ருந்த 4 பேருக்கும் அவர்கள் மீதான குற் றச்சாட்­டுக்கள் வாசித்து காட்­டப்­பட்­டன. இதன்­போது அந் நால்­வரும் தாம் குறித்த குற்றச்சாட்­டுக்கள் தொடர்பில் நிர­ப­ரா­திகள் என தனித்­த­னி­யாக அறி­வித்­தனர்.

இந் நிலையில் சாட்சி விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­னது. இந்த விசா­ர­ணைகள் தமிழ், சிங்­களம் ஆகிய இரு மொழி­க­ளிலும் அமைந்­தி­ருந்­தமை விசேட அம்­ச­மாகும்.

இந் நிலையில் நேற்று நீதி­மன்ற அறி­வித் தல் பிர­காரம் மன்றில் ஆஜ­ரான முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ முதலில் சாட்­சி­ய­ம­ளித்தார். குறித்த சாட்­சி­யத்தை அரசின் பிரதி சொலி­சிற்றர் ஜெனரல் ரொஹான் அபே­சூ­ரிய நெறிப்­ப­டுத்­தி­ய­துடன் அவ­ருக்கு உத­வி­யாக சிரேஷ்ட அரச சட்­ட­வாதி நயோமி விக்­ர­ம­சே­கர செயற்­பட்டார்.

அந்த சாட்­சி­யத்தை சுருக்­க­மாக தரு­கி றோம்.

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: நீர் பாது­காப்பு செய­லா­ள­ராக பத­வி­யேற்க முன்னர் என்ன செய்தீர்?
கோத்தா: அதற்கு முன்னர் நான் இரா­ணு­வத்தில் சேவை­யாற்­றினேன். சுமார் 20 வரு­டங்கள் அவ்­வாறு சேவை­யாற்­றினேன்.
பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: அப்­ப­டி­யானால் எப்­போது இரா­ணு­வத்தில் இணைந்தீர்? எப்­போது ஓய்­வு­பெற்றீர்?

கோத்தா: 1970 ஆம் ஆண்டு நான் இரா­ணு­வத்தில் சேர்ந்தேன். 1991 ஆம் ஆண்டு ஓய்­வு­பெற்றேன்.
பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: இரா­ணு­வத்தில் இருந்த போது எங்கு சேவை செய்­தீர்கள்?

கோத்தா: இலங்­கையின் பல பாகங்­க­ளிலும் வேலை செய்­தி­ருக்­கிறேன். குறிப்­பாக கூடிய காலம் வடக்­கி­லேயே சேவை செய்தேன். அதற்கு மேல­தி­க­மாக மாத்­தளை, அனு­ரா­த­புரம் பகு­தி­க­ளிலும் சேவை­யாற்­றினேன்.<பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: எந்த தர நிலையில் நீர் சேவை­யாற்­றினீர்?கோத்தா: நான் இரா­ணு­வத்தில் கெடட் அதி­கா­ரி­யா­கவே இணைந்­து­கொண்டேன். பின்னர் 1971 ஆம் ஆண்டு 2 ஆவது லெப்­டி­ ன­ன்ட்டாக பதவி உயர்த்­தப்­பட்டேன். பின் னர் லெப்­டினன்ட், கெப்டன், மேஜர், லெப்­டினன்ட் கேர்ணல் தரம் வரை பதவி உயர்வு பெற்றேன்.

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: ஓய்­வு­பெற்ற பின்னர் அரச பணிகள் எதிலும் ஈடு­பட்­டீரா?

கோத்தா: ஆம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாது­காப்பு செய­லா­ள­ராக நான் நிய­மிக்­கப்­பட்டேன்.பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: இரா­ணு­வத்­தி­லி­ருந்து ஓய்­வு­பெற்­றதும் எங்கு நீர் வாழ்ந்தீர்?கோத்தா: அமெ­ரிக்­காவில், அங்கு எனக்கு குடி­யு­ரி­மையும் கிடைத்­தது

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: நீங்கள் பாது­காப்பு செய­லா­ள­ராக கட­மை­யேற்கும் போது பாது­காப்பு அமைச்சர் யார்? பிர­தி­ய­மைச்சர் யார்?

கோத்தா: ஜனா­தி­ப­தியே அப்­போது பாது­காப்பு அமைச்சர், பிர­தி­ய­மைச்சர் யாரும் இருக்­க­வில்லை.
பிரதி சொலி­சிற்றர் ஜெனரால்: பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான தாக்­கு­தல்­களில் நீர் பங்­கேற்­றுள்­ளீரா? அப்­ப­டி­யானால் சுருக்­க­மாக அதனை கூறுங்கள்?<

கோத்தா: ஆம், வட­ம­ராட்சி மீட்பின் போது நான்கு படை­ய­ணிகள் பங்­கேற்­றன. அதில் பிர­தான படை­ய­ணியின் கட்­டளை தள­ப­தி­யாக நானே இருந்தேன்.

இதனை விட 1990 ஆம் ஆண்டு இரண்டாம் ஈழப் போர் ஆரம்­ப­மான போது யாழ். கோட்­டையில் சிறைப்­பட்ட இரா­ணுவ வீரர்கள், பொலி­ஸாரை மீட்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்த படை நட­வ­டிக்­கையின் கட்­டளைத் தள­ப­தி­யாக நான் இருந்தேன். அக்­கா­லப்­ப­கு­தியில் திரு­கோ­ண­மலை, வவு­னியா, யாழ்ப்­பாணம் மற்றும் மட்­டக்­க­ளப்பு பகு­தி­களில் பல படை நட­வ­டிக்­கை­களில் நான் பங்­கு­கொண்டேன்.&
lt;
பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: நீங்கள் பத­வி­யேற்ற போது நாட்டின் பாது­காப்பு நிலை­வரம் எப்­படி இருந்­தது?

கோத்தா: நான் பத­வி­யேற்ற போது வவு­னி­யாவின் பெரும்­ப­லான பகுதி புலி­களின் கட்­டுப்­பாட்டில் இருந்­தன. கிழக்கில் மூன்றில் இரண்டு பங்கும் புலி­களின் கட்­டுப்­பாட்டில் இருந்­தன. எனக்கு கிடைத்த உளவுத் தக­வல்­களின் படி அப்­போது 35000 பேர் வரை புலி­களின் ஆயு­தப்­ப­டையில் இருந்­தனர். இதனை விட 30000 இற்கும் அதி­க­மானோர் சுயேட்­சை­யாக புலி­க­ளுடன் இணைந்­தி­ருந்­தனர். இதனை விட கொழும்பு உள்­ளிட்ட நக­ரங்­களில் தாக்­குதல் நடத்தும் வண்ணம் அவர்­க­ளது வலை­ய­மைப்பு பரந்­தி­ருந்­தது.

அவர்­க­ளிடம் விஷேட பீரங்­கிகள் இருந்­தன. கடலின் பெரும்­பா­லான பகு­தியை தமது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருந்­தனர். தாக்­குதல் பட­குகள் அவர்­க­ளிடம் இருந்­தன. உளவுத் தக­வல்­களின் படி­அ­வர்­க­ளிடம் விமா­னப்­ப­டையும் சிறிய ரக விமா­னங்­களும் இருந்­தன.

போர் நிறுத்த காலப்­ப­கு­தியில் மட்டும் புலிகள் 3000 தட­வைகள் ஒப்­பந்­தத்தை மீறி­யி­ருந்­தனர். புலி­களின் நிரு­வாகப் பகு­தி­க­ளுக்குள் இரா­ணுவம் , பொலிசார் செல்­லவே முடி­யாத நிலை காணப்­பட்­டது.

வடக்கில் புலி­களால் தனி­யான பொலிஸ், வங்கி, மற்றும் நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­றன. மத்­திய அரசின் எந்த நிர்­வாக நட­வ­டிக்­கை­களும் அங்கு இடம்­பெ­ற­வில்லை.

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: அப்­ப­டி­யானால் பாது­காப்பு செய­லா­ள­ராக பத­வி­யேற்ற பின்னர் பயங்­க­ர­வா­தத்தை கட்­டுப்­ப­டுத்த எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தீர்?

கோத்த: நாட்டின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் வித­மாக பாது­காப்பு செயலர் செயற்­பட வேண்டும். அதன்­படி உரிய தரப்­புடன் இணைந்து பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த நான் பல்­வேறு திட்­டங்­களை வகுத்தேன். உளவுப் பிரிவு, பொலிஸ், இரா­ணுவம் உள்­ளிட்ட முப்­ப­டை­களை ஒரே அணியில் திரட்டி உளவுத் தக­வல்கள் அனைத்­தையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்தேன்.

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: பாது­காப்பு செய­லா­ள­ருக்கு மேல­தி­க­மாக நீர் வேறு அரச பத­வி­களை வகித்­தீரா?

கோத்தா: ஆம், 2010 ஆம் ஆண்டு பாது­காப்பு அமைச்சின் கீழ் நகர அபி­வி­ருத்தி அமைச்சும் கொண்டு வந்த நிலையில் அதன் செய­லா­ள­ரா­கவும் நான் கட­மை­யாற்­றினேன்.

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: பாது­காப்பு செய­லா­ள­ராக நீர் எங்கு வசித்தீர்?

கோத்தா: பெளத்­தா­லோக்க மாவத்­தையில் உள்ள ‘ ஸ்டன்வோ கிரசன்ட் ‘ பாது­காப்பு செய­லா­ளரின் உத்­தி­யோக பூர்வ இல்­லத்­தி­லேயே வசித்தேன்.

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: உமது அமைச்சு எங்­கி­ருந்­தது.

கோத்தா: காலி முகத்­திடல் பிர­தே­சத்­துக்கு அண்­மையில்

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: 2005 இல் பாது­காப்பு செய­லா­ள­ராக பத­வி­யேற்ற நீங்கள் எடுத்த நட­வ­டிக்­கைகள் என்ன?

கோத்தா: அப்­போ­தைய பயங்­க­ர­வாத நிலை­மை­களை கட்­டுப்­ப­டுத்த பூரண நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தேன். இது தொடர்பில் எமது முப்­ப­டை­யி­ன­ருக்கும் விஷேட பயிற்­சிகள் அளிக்­கப்­பட்­டன. உளவுப் பிரி­வு­களை ஒன்று திரட்டி பயங்­க­ர­வா­தத்தை எதிர்­கொள்ள புதி­தாக 76 புதிய படை­ய­ணி­களை உரு­வாக்­கினேன்.

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: இக்­கா­லப்­ப­கு­தியில் உமக்கு பாது­காப்­ப­ளித்­தது யார்?

கோத்தா: இரா­ணு­வத்தின் விஷேட குழு எனக்கு பாது­காப்­ப­ளித்­தது. இரா­ணுவ தள­ப­தியின் நேரடி கட்­டுப்­பாட்டில் அக்­குழு செயற்­பட்­டது.

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: 2005 டிசம்பர் முதல் 2006 டிசம்பர் வரை­யி­லான காலப்­ப­கு­தியில் உமது பாது­காப்பு தொடர்பில் உளவுத் தக­வல்கள் அடிக்­கடி திரட்­டப்­பட்­ட­னவா?

கோத்தா: எனது பாது­காப்பு தொடர்­பி­லான தக­வல்கள் எனக்கு நேர­டி­யாக வராது. அது எனது பாது­காப்பை முன்­னெ­டுத்த குழு­வுக்கே செல்லும். எனினும் பாது­காப்பு குழு கூட்­டத்தில் அவை எமக்கு அறி­யத்­த­ரப்­படும். அதன்­படி அப்­போ­தைய ஜனா­தி­பதி, பாது­காப்பு செய­லாளர், இரா­ணுவ, கடற்­படை மற்றும் விமா­னப்­படை தள­ப­தி­க­ளுக்கு புலி­க­ளி­ட­மி­ருந்து பாரிய அச்­சு­றுத்தல் இருந்­தன.

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: அதன்­படி உமக்கு விசேட பாது­காப்பு வழங்­கப்­பட்­டி­ருந்­ததா?

கோத்தா: ஆம், இரா­ணுவ பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டது. குண்டு துளைக்­காத கார் பயன்­பாட்­டுக்கு தரப்­பட்­டது.

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: அதன் ரகம் என்ன?

கோத்தா: அது பி.எம்.டப்­ளியூ. ரகத்தை சேர்ந்­தது. இது போன்ற 4 கார்கள் ஜனா­தி­பதி செய­லக கட்­டுப்­பாட்டில் இருந்­தன. அவை எனக்கும் முப்­படை தள­ப­தி­க­ளுக்கும் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டன.

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: உமது பாது­காப்­புக்கு அப்­போது (2006) எத்­தனைப் பேர் இருந்­தனர்.

கோத்தா: சரி­யான எண்­ணிக்கை எனக்கு தெரி­யாது. எனினும் 50 பேர் வரையில் இருந்­தனர்.

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: உமது பாது­காப்­புக்கு பொறுப்­பாக இருந்­தது யார்?

கோத்தா: 4 அதி­கா­ரிகள் இருந்­தனர். ஜயந்த ரத்­நா­யக்க என்­பவர் பிர­தா­ன­மா­னவர்.

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: நீங்கள் ஒரு இடத்­துக்கு பய­ணிக்கும் போது உமது பி.எம்.டப்­ளியூ. வாக­னத்­துக்கு மேல­தி­க­மாக எத்­தனை வாக­னங்கள் கூட வரும்?

கோத்தா: சாதா­ர­ண­மாக 3 மோட்டார் சைக்­கிள்கள், 3 டிபண்­டர்கள்

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: அவ்­வா­க­னங்­களில் பய­ணிப்போர் இரா­ணு­வத்­தி­னரா?

கோத்தா: ஆம்

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: நீங்கள் ஒரு இடத்­துக்கு போகும் போது அங்கு போகும் பாதையை யார் தீர்­மா­னிப்­பது?

கோத்தா: எனது பாது­காப்பு அதி­கா­ரி­களே தீர்­மா­னிப்பர். இதற்­காக பிர­தேச பொலி­ஸாரின் ஒத்­து­ழைப்பும் பெறப்­படும்

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: உமது போக்கு வரத்து திட்­டத்தை முன்­கூட்­டியே அவர்கள் தயா­ரிப்­பார்­களா?

கோத்தா: எனது ஒரு நாள் செயற்­றிட்­டங்­களை நான் எனது பாது­காப்பு அதி­கா­ரி­க­ளுக்கு வழங்­குவேன். அவர்கள் தீர்­மா­னிப்பர்.

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: உமது பய­ணப்­பாதை குறித்த அறி­வு­றுத்­தல்கள் யாருக்கு கிடைக்கும்?

கோத்தா: எனது பாது­காப்பு அதி­கா­ரி­க­ளுக்கு

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: 2005 டிசம்பர் முதல் 2006 டிசம்பர் வரை­யி­லான காலப்­ப­கு­தியில் எந்த மாதத்தில் இருந்து பி.எம்.டப்­ளியூ காரினை பயன்­ப­டுத்­தினீர்?

கோத்தா: மாதம் எல்லாம் ஞாபகம் இல்லை, எனினும் கிடைத்­தது முதல் அத­னையே பயன்­ப­டுத்­தினேன்.

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: 2006 ஆம் ஆண்டில் உமக்கு மறக்க முடி­யாத ஒரு பயங்­கர அனு­பவம் உள்­ளது அல்­லவா?

கோத்தா: ஆம்

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: அந்த திகதி?

கோத்தா: டிசம்பர் மாதம் முதலாம் திகதி

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: அந்த சம்­பவம் குறித்து கூற முடி­யுமா?

கோத்தா: அன்­றைய தினம் வீட்டில் இருந்து அமைச்­சுக்கு செல்ல முன்னர் அலரி மாளி­கைக்கு செல்­வ­தற்­காக நான் சென்­று­கொண்­டி­ருந்தேன்

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: அலரி மாளி­கையில் விஷேட கூட்டம் ஏதும் இருந்­ததா?

கோத்தா: ஆம், எனது ஞாப­கப்­படி பாது­காப்புக் குழு கூட்டம் இருந்­தது.

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: பாது­காப்புக் குழுவின் தலைவர் யார்?, ஏனைய உறுப்­பி­னர்கள் யார்?

கோத்தா: தலைவர் ஜனா­தி­பதி. உறுப்­பி­னர்­க­ளாக பாது­காப்பு செய­லாளர், ஜனா­தி­பதி செய­லாளர், நிதி­ய­மைச்சின் செய­லாளர், முப்­படை தள­ப­திகள், பொலிஸ் மா அதிபர், உளவுப் பிரி­வு­களின் பிர­தா­னிகள் ஆகியோர் பங்­கேற்பர்

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: நீர் எங்­கி­ருந்து புறப்­பட்டீர்?

கோத்தா: வீட்­டி­லி­ருந்து

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: அப்­போது நேரம்

கோத்தா: முற்­பகல் 10.30 இற்கும் 10.35 இற்கும் இடைப்­பட்­ட­தாக இருக்கும்.

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: எந்த வாக­னத்தில்?

கோத்தா: பி.எம்.டப்­ளியூ. வில்

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: அதன் சாரதி யார்?

கோத்தா? சிவில் ஒருவர். அவ­ரது பெயர் குமார

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: உம்­மையும் சார­தி­யையும் தவிர வேறு யாரா­வது காரில் இருந்­த­னரா?

கோத்தா: ஆம், எனது பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் ஒருவர் இருந்தார்.

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: யார் அது?

கோத்தா: கப்­புகே< /span>

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: அவரா உமது தனிப்­பட்ட பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர்?

கோத்தா? ஆம்

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: அலரி மாளி­கைக்­கான பய­ணப்­பாதை எது?

கோத்தா: வீட்­டி­லி­ருந்து ஸ்டான்லி விஜே­ரத்ன மாவத்தை ஊடாக கறு­வாத்­தோட்டம் பொலிஸ் நிலையம் முன்­பாக வந்து , கேம்­பிரிஜ், மார்கஸ் பெர்­னாண்டோ, அநா­க­ரிக தர்­ம­பால மாவத்­தை­யூ­டாக, பித்­தளை சந்தி, ஜேம்ஸ் பீரிஸ், பெரேரா மாவத்தை ஊடாக அலரி மாளிகை.

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: வேறு பாதைகள்?

கோத்தா: வீட்­டி­லி­ருந்து பெளத்­தா­லோக்க மாவத்தை, பம்­ப­ல­பிட்டி சந்தி, காலி வீதி, கொள்­ளு­பிட்டி ஊடாக அலரி மாளிகை

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: 2006. டிசம்பர் முதலாம் திகதி நீர் எந்த பாதையைப் பயன்­ப­டுத்­தினீர்?

கோத்தா: முதலில் கூறிய பாதையை

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: அலரி மாளிகை நோக்கி செல்லும் போது அன்று விஷேட சம்­ப­வங்கள் ஏதும் பதி­வா­னதா?< /span>

கோத்தா: ஆம், அன்று பித்­தளை சந்­தியில் குண்டுத் தாக்­குதல் ஒன்று மேற்­கொள்­ளப்­பட்­டது.

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: சம்­ப­வத்தின் போது பி.எம். டப்­ளியூ வண்­டியில் நீர் எந்த இடத்தில் அமர்ந்­தி­ருந்தீர்

கோத்தா: பின்­னி­ருக்­கையில் இடது புற­மாக அமர்ந்­தி­ருந்தேன். எனக்கு முன் இருக்­கையில் எனது பாது­காப்பு உத­வி­யாளர் இருந்தார்.

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: என்ன நடந்­தது என ஞாபகம் உள்­ளதா?

கோத்தா: ஆம், அப்­ப­கு­தியில் உள்ள பொது வாசி­க­சா­லையைத் தாண்டி, செஞ்­சி­லுவைச் சங்க தலை­மை­யகம் அருகே தர்­ம­பால மாவத்­தைக்குள் நான் பய­ணித்த கார் நுழைந்­தது. அப்­போது அங்கு சிவப்பு நிற சமிக்ஞை விளக்கு எரிந்­து­கொண்­டி­ருந்த நிலையில் எதிர்த்­தி­சை­யி­லேயே எமது வாகனம் பய­ணித்­தது. அத­னூ­டாக பித்­தளை சந்­தியை நாம் அடைந்தோம்

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: பித்­தளை சந்­தியில் இருந்து எந்த பக்கம் திரும்ப முற்­பட்­டீர்கள்?

கோத்தா: பித்­தளை சந்­தியில் இருந்து வலது பக்­கமே திரும்­பு­வ­தாக இருந்­தது

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: திரும்ப வாய்ப்பு கிடைத்­ததா?

கோத்தா: எனது வாகனம் திரும்ப வில்லை. முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் திரும்­பி­யது.

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: முன்னால் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் இருந்­த­னரா?

கோத்தா: ஆம், ஒரு மோட்டார் சைக்கிள் டிபண்டர் ரக வாகனம் ஆகி­யன சென்­றன.

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: உமது காரின் பக்­க­வாட்டில் மோட்டார் சைக்­கிள்கள் பய­ணித்­த­னவா?

கோத்தா: ஆம், இரு பக்­கத்­திலும் கத­வு­க­ளுக்கு நேரே இரு மோட்டார் சைக்­கிள்கள் பய­ணித்­தன

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: அப்­போது என்ன நடந்­தது?

கோத்தா: திடீ­ரென பாரிய சத்தம் ஒன்று தீ பிளம்பு தெறிக்க கேட்­டது. அதன் போது நான் காரினுள் வலது புறத்தை நோக்கி தூக்கி வீசப்­பட்டேன். கார் கண்­ணா­டிகள் தூளா­காத போதும் வெடிப்­புக்கு உள்­ளா­கின.

எனக்கு முன்­பாக மோட்டார் சைக்கிள் ஒன்று தீயில் எரிந்­து­கொண்­டி­ருந்­தது. அப்­போது தான் எம்மை நோக்கி குண்டுத் தாக்­குதல் ஒன்று இடம்­பெற்­றுள்­ளதை உணர்ந்தேன்.

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: வெடிப்பின் பின் கார் முன்­னோக்கி நகர்ந்­ததா?

கோத்தா: இல்லை. அந்த இடத்­தி­லேயே நின்­றது.

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்:ஏன் சார­திக்கு ஏதும் காயங்­களா?

கோத்தா: இல்லை. காயங்கள் இல்­லாத போதும் சார­தியும் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தரும் அதிர்ச்­சியில் உறைந்­தி­ருந்­தனர்.

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: நீர் வாக­னத்தில் இருந்து இறங்க முற்­பட்­டீரா?

கோத்தா: ஆம், எனினும் முடி­ய­வில்லை. காரின் கத­வுகள் ‘லொக்’ செய்­யப்­பட்­டி­ருந்­தன.

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: எப்­படி வெளியே வந்தீர்?

கோத்தா: பின்னர் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் கதவை உடைத்து வெளி­யேற்­றினர்.

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: அதன்­பின்னர் அவ்­வி­டத்தை நீர் மேற்­பார்வை செய்­தீரா?

கோத்தா: இல்லை. எனக்கு அவ்­வி­டத்தில் நட­மாட பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் இடம் தர­வில்லை. நேர­டி­யாக டிபண்­டரில் ஏறி அலரி மாளி­கைக்கு அழைத்துச் சென்­றனர்.

பிரதி சொலி­சிற்றர் ஜெனரல்: அங்கு சென்ற பின்னர் சம்­பவம் தொடர்பில் என்ன கேள்­விப்­பட்டீர்?

கோத்தா:குண்டு வெடிப்பில் எனது பாது­க­பபு உத்­தி­யோ­கத்­தர்கள் மூவர் உயி­ரி­ழந்து மேலும் 9 பேர் படு­கா­ய­ம­டைந்த செய்தி கிடைத்­தது.

பிரதி சொலி­சிற்றர் ஜெனரால்: குண்டு சரி­யாக எங்கு வைத்து எப்­படி வெடிக்கச் செய்­யப்­பட்­டது?

கோத்தா: தெரி­யாது. நான் காண­வில்லை. சத்தம் , உணர்ச்­சி­க­ளி­னா­லேயே குண்டுத் தாக்­கு­தலை உணர்ந்தேன்.

பிரதி சொலி­சிற்றர் ஜெனரால்: இது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு வாக்கு மூலம் வழங்­கி­னீரா?

கோத்தா: ஆம்

இத­னை­ய­டுத்து பிரதி சொலி­சிற்றர் ஜெனரல் ரொஹான் தனது சாட்சி நெறிப்­ப­டுத்­தலை நிறைவு செய்தார். இத­னை­ய­டுத்து மேல் நீதி­மன்ற ஆணை­யாளர் ஐராங்­கனி பெரேரா குறுக்குக் கேள்­விகள் உள்­ளதா என சந்­தேக நபர்­களின் சட்­டத்­த­ர­ணி­க­ளிடம் கேட்டார். இதன்­போது அனை­வரும் அமை­தி­யாக இருக்க , இரண்­டா­வது சந்­தேக நபரின் சட்­டத்­த­ர­ணி­யான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கே.வி. தவ­ராசா குறுக்குக் கேள்­விகள் உள்­ள­தாக கூறி கேட்டார்.

கே.வி. தவராசா: குண்டுவெடித்தது எனக் கூறுகிறீர்கள். இது தொடர்பில் பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்கினீரா?

கோத்தா: ஆம்

கே.வி. தவராசா: எத்தனை தடவைகள் வழங்கினீர்?

கோத்தா: ஒரே ஒரு தடவை

கே.வி. தவராசா: எப்போது வழங்கினீர், யாருக்கு வழங்கினீர்?

கே.வி. தவராசா: எத்தனை தடவைகள் வழங்கினீர்?

கோத்தா: எப்போது என்பது யாபகம் இல்லை, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வழங்கினேன்.

கே.வி. தவராசா: திகதியை நான் ஞாபகப்படுத்தவா?

கோத்தா: ஆம்

கே.வி. தவராசா: 2013.07.25 அன்று நீர் வாக்கு மூலமளித்தீர்? இது சரி தானே..

கோத்தா: ஆம்.. நிச்சயமாக

கே.வி. தவராசா: அப்படியானால் சம்பவம் இடம்பெற்று 7 வருடங்களின் பின் வாக்கு மூலம் வழங்கியுள்ளீர், அதுவும் ஒரே ஒரு தடவை மட்டும்?

கோத்தா: ஆம்

கே.வி. தவராசா: சம்பவம் தொடர்பில் எங்கேனும் முறைப்பாடுகள் செய்துள்ளீரா?

கோத்தா: இது வரை இல்லை

அந்த கேள்விகளுடன் கோத்தா மீதான சாட்சி விசாரணை நிறைவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து மன்றின் நடவடிக்கைகள் பிற்பகல் 1.30 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டன. பின்னர் மீள மன்றின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கவே நேற்று மன்றில் ஆஜரான கோத்தாவின் பாதுகாப்பு உத்தியோகத்தரான கேர்ணல் சுரங்க ரந்தெனியவின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.

தான் பிரபுக்கள் பாதுகாப்புக்கு என இந்தியாவின் ‘ பிளக் கெட் ‘ படைப் பிரிவில் ஒரு மாதகாலம் பயிற்சி எடுத்ததாகவும், சம்பவத்தையடுத்து டிபண்டரில் வழமையாக வைத்திருக்கும் அலவாங்கை கொண்டுவந்தே குண்டு துளைக்காத காரின் கதவை உடைத்து கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிடோரை காரில் இருந்து மீட்டதாகவும் அவர் சாட்சியமளித்தார்.

இந் நிலையில் இந்த வழக்கு தொடர்பிலான விசாரணைகள் எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.

Comments
Loading...