Designed by Iniyas LTD
தற்போதைய முதல்வர் தன் சீட்டில் அமரவே பயப்படுகிறார் – முரளிதர் ராவ்
தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் இருக்கையில் அமரவே பயப்படுகிறார் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. சென்னை மறைமலை நகரில் நடைபெற்ற பா.ஜ. பொதுக் கூட்டத்தில் பா.ஜ மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் பேசுகையில், தமிழகத்தில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர், தன் குடும்பத்தை தான் பார்த்தார், மக்களை கண்டுகொள்ளவில்லை.
இன்று அவரது குடும்பத்தினர் சிறை பயத்தில் உள்ளனர். மற்றொரு கட்சிக்கு, தமிழக மக்கள் மெஜாரிட்டி கொடுத்தனர். ஆனால் அதன் தலைவருக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்துள்ளது.
தற்போதைய முதல்வர் தன் சீட்டில் அமரவே பயப்படுகிறார். அந்த கட்சியில் தலைவர்கள் இல்லை. பா.ஜவில் ஏராளமான தலைவர்கள் உள்ளனர். தற்போது தமிழகத்தில் மாற்றத்திற்கான காலம் வந்து விட்டது என்று கூறியுள்ளார்.