தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தாண்டிக்குளத்தில் இராணுவ லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் படுகாயம்…

வவுனியா தாண்டிக்குளத்தில் இராணுவ லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை வீரபுரத்தில் இருந்து ஒமந்தை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் தாண்டிக்குளம்  முகாமில் இருந்து இராணுவத்தினரை ஏற்றி வந்த லொறியுடன் மோதியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அன்ரணி யோகேஸ்வரன் அனுஸாந்தன் (வயது 25), அனுஸாந்தன் பவித்திரா (வயது 18) ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த   மோட்டார் சைக்கிளினை நிறுத்துவதற்கு  தாண்டிக்குளம் சந்தியில் கடமையில் ஈடுபட்ட போக்குவரத்து பொலிஸார் முயன்றுள்ளனர்.
எனினும்  அதனைப் பொருட்படுத்தாமல் அவர்கள்  சென்றதாகவும் பொலிஸார்  கூறியுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணை வவுனியா பொலிஸார்  மேற்கொண்டுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...