Designed by Iniyas LTD
யாழில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட 58 பேர் கைது…
யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி வருண ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கடந்த 4 மாதங்களில் பிரதான குழுவை சேர்ந்த 7 தலைவர்கள் உட்பட 58 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் வைத்து குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் ஆவா குழு, தனுரொக் குழு, அஜித் குழு உட்பட பல குழுக்கள் வன்முறைகளில் ஈடுபடுகின்ற போதிலும், அதில் இரண்டு குழுக்கள் மாத்திரமே பிரபல்யம் அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.