Designed by Iniyas LTD
தாயகத்தில் மாட்டுவண்டி சவாரிக்கு தடை!
தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு ஏற்கனவே தமிழகத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையினில் தற்போது ஈழத்தில் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாட்டுவண்டிச்சவாரி மிருகவதைச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது.
சாவகச்சேரி சரசாலை, குருவிக்காடு தரைவையில் இன்று 17ம் திகதி ஞாயிற்றுக் கிழமை வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்படவிருந்த மாட்டுவண்டில் சவாரிக்கே தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தென்மராட்சி பிரதேச செயலர் இதற்கான அனுமதியை மறுத்துள்ளார். இதனால் சவாரி நிறுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தென்மராட்சி பிரதேச செயலகத்துடன் இணைந்து மாட்டுவண்டி சவாரிக்கு அழைப்புவிடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.