தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தாய் தந்தையை பச்சை குத்திய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வீரர்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் இளம் வீரரான சூர்ய குமார் யாதவ் விளையாடி வருகிறார்.  இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில், 5 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 20 பந்துகளில் 46 ஓட்டங்களை குவித்து வெற்றிக்கு உதவினார்.tatto

சூர்யகுமாரின் திறமையை கண்டு வியந்த அணி நிர்வாகம் அவருக்கு உதவி அணித்தலைவர் பொறுப்பு வழங்கியுள்ளது.

இவரது பெற்றோர் அசோக்-சப்னா, சூர்ய குமாரின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையாக உள்ளனர். சூர்ய குமாரும் தனது பெற்றோர்கள் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளார்.

இந்நிலையில் சூர்ய குமார் தனது பெற்றோருக்கு நன்றி செலுத்தும் வகையில் அவர்களது உருவங்களை தனது வலது கையில் பச்சை குத்தி உள்ளார்.

முதலில் அவர் தனது வலது கையில் தனது பெற்றோர்களின் பெயரை தான் பச்சை குத்தி இருந்தார்.

இது பற்றி அவர் கூறுகையில், இது தனது பெற்றோர்களுக்கு செய்யும் மரியாதை என்றும், எப்போதும் அவர்களை நினைகூர்ந்து கொள்ளவே பச்சை குத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...