தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாக்கிஸ்தானை வீழ்த்திய வங்கதேசம்

வங்கதேச அணி 16 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது. டாக்காவில் வங்கதேசம்- பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நடந்தது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் அபார சதமடித்து அசத்த 50 ஓவரில் 329 ஓட்டங்கள் எடுத்தது.bangladesh_vs_pakistan

இதுவே இந்த அணியின் ஒருநாள் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும். 330 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி சுமாரான தொடக்கம் கண்டது.

சர்பராஸ் அகமட் (24), மொகமது ஹபீஸ் (4) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 13-வது ஓவரில் 59/2 என்று ஆனது.

அதன் பிறகு அசார் அலியும், ஹாரிஸ் சோஹைலும் இணைந்து 89 ரன்களை 93 பந்துகளில் 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். அப்போது அசார் அலி, டஸ்கின் அகமதுவிடம் அவுட் ஆனார்.

32-வது ஓவரில் 175/4 என்ற நிலையில் ஃபவாத் ஆலம், மொகமது ரிஸ்வான் இணைந்தனர். இருவரும் இணைந்து 40-வது ஓவர் நடு வரையில் தாக்குப் பிடித்து ஸ்கோரை 217 ஓட்டங்களுக்கு உயர்த்தினர்.

தொடர்ந்து விக்கெட்டுகள் சரிய 45.2 ஓவரில் 250 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  முடிவில் வங்கதேச அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Comments
Loading...