தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திமுகவின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் கோரிக்கைகள் இடம்பெறும்

திமுகவின் தேர்தல் அறிக்கையில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.dmk-karunanidhi

 திமுகவின் தேர்தல் அறிக்கையை இறுதி செய்யும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக கோபாலபுரத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க. ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, டி ஆர் பாலு, டி கே எஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தினர்.   பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், தேர்தல் அறிக்கை தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், விரைவில் திமுக தலைவர் அதனை வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.

தேர்தல் அறிக்கையில் விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் டிகேஎஸ் இளங்கோவன் குறிப்பிட்டார்.

Comments
Loading...