தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திருநங்கை பிரித்திகா யாசினிக்கு உதவி ஆய்வாளர் பணி வழங்கப்பட்டுள்ளது

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாசினி உள்பட 22 பேருக்கு உதவி ஆய்வாளருக்கான பணி ஆணை இன்று வழங்கப்பட்டது.  சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், ஆணையாளர் சுமித் சரண் கலந்து கொண்டு அனைவருக்கும் பணி ஆணைகளை வழங்கி பாராட்டுக்களைத் தெரிவித்தார்.piruthika

பணி ஆணை பெற்றவர்களுக்கான பயிற்சி, வண்டலூர் அருகே உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் வரும் 26-ம் தேதி முதல் தொடங்க உள்ளது.   பயிற்சி முடிந்த பின்னர் இவர்கள் அனைவருக்கும் முறைப்படி பணி வழங்கப்படும். பணி ஆணையை பெற்ற பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய பிரித்திகா யாசினி, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை கிடைக்க பாடுபடப் போவதாகக் கூறியுள்ளார்.

Comments
Loading...